Advertisement

வீடுகள் விலை அதிகரிப்பு இந்தியாவுக்கு 54வது இடம்

Share

புதுடில்லி:வீடுகள் விலை அதிகரிப்பில், இந்தியா, 54வது இடத்துக்கு சரிந்துள்ளதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான, நைட் பிராங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜூன் காலாண்டில், வீடுகளின் விலையில், 2 சதவீதம் சரிவு ஏற்பட்டதை அடுத்து,
56 நாடுகள்கொண்ட பட்டியலில்இந்தியா, 54வது இடத்துக்கு சரிந்துள்ளது.இது குறித்து, நைட் பிராங் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டுக்கான உலகளாவிய வீடுகள் விலை குறியீட்டில், இந்தியாவில் வீடுகள் விலை, 1.99 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இதன் காரணத்தினால், கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில், 43வது இடத்தில் இருந்த இந்தியா, 54வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது.இந்த குறியீட்டிற்காக உலகளவில், 56 நாடுகளில் உள்ள முக்கியமான இடங்களில் உள்ள விலை நிலவரங்கள் கணக்கில் கொள்ளப்படுகிறது.

இக்குறியீட்டில், 25.7 சதவீதம் அதிகரிப்பை கண்டு, முதல் இடத்தில் துருக்கி உள்ளது. ஹாங்காங் மிக குறைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது. இங்கு வீட்டு விலை, 2.8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இக்குறியீட்டில், முதல், 10 இடங்களை ஐரோப்பிய நாடுகளே பிடித்துள்ளன.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement