Advertisement

வங்கிகள் வட்டியை குறைக்க வாகன துறை கோரிக்கை

புது­டில்லி:ரிசர்வ் வங்கி அறி­வித்­துள்ள வட்டி குறைப்­பின் பலனை, வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வங்­கி­கள் வழங்க வேண்­டும் என எதிர்­பார்ப்­ப­தாக, இந்­திய மோட்­டார் வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்பு தெரி­வித்­து உள்­ளது. மேலும், வட்­டியை குறைப்­ப­தால், வாக­னத் துறை போன்ற துறை­களில், தேவை அதி­க­ரிக்­கும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, இந்­திய மோட்­டார் வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­ட­மைப்­பின் தலை­வர் ராஜன் வதேரா கூறி­யுள்­ள­தா­வது:ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகி­தத்தை, 4.40 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 4 சத­வீ­த­மாக குறைத்து அறி­வித்­துள்­ளது மிக­வும் வர­வேற்­கத் தக்­க­தா­கும். இது, கடன் வாங்­கு­ப­வர்­க­ளுக்கு சாத­க­மாக இருக்­கும் என்­ப­தால், சந்­தை­யில் தேவை அதி­க­ரிக்­கும்.
ரிசர்வ் வங்கி, வட்­டியை குறைத்­தி­ருப்­பதை அடுத்து, வங்­கி­கள் அதன் பலனை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வழங்­கும் என, நாங்­கள் எதிர்­பார்க்­கி­றோம். இவ்­வாறு அவர்
கூறி­யுள்­ளார்.
பொரு­ளா­தார மந்­த­நிலை கார­ண­மாக, வாகன விற்­பனை சரிந்து வந்த நிலை­யில், ஊர­டங்கு
அறி­விக்­கப்­ப­ட­வும் விற்­பனை சுத்­த­மாக இல்­லா­மல் ஆகி­விட்­டது. கடந்த ஏப்­ரல் மாதத்­தில், பெரும்­பா­லான வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­களின் விற்­பனை, பூஜ்­ஜி­யம் என்ற நிலைக்கு சென்­று­விட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.இந்­நி­லை­யில் விரை­வில் பொரு­ளா­தார செயல்­பா­டு­கள் அதி­க­ரித்து, சந்­தை­யில் தேவை அதி­க­ரிக்­கும் என்ற எதிர்­பார்ப்­பில் உள்ளன, வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement