Advertisement

அமேசானில் 50 ஆயிரம் பேருக்கு வேலை

புது­டில்லி:‘அமே­சான்’ நிறு­வ­னம், தற்­கா­லி­க­மாக, 50 ஆயி­ரம் பேருக்கு வேலை­வாய்ப்பை வழங்க இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.கொரோனா தாக்­கம் கார­ண­மாக, பொது இடங்­க­ளுக்கு வர தயங்­கு­ப­வர்­கள், ‘ஆன்­லைன்’ மூல­மாக பொருட்­களை பெறு­வ­தில் அதிக ஆர்­வம் காட்­டு­கி­றார்­கள்.இத­னால், அமே­சான் உள்­ளிட்ட ஆன்­லைன் வர்த்­தக நிறு­வ­னங்­களின் தேவை அதி­க­ரித்­துஉள்­ளது.

இதை­ய­டுத்து, அமே­சான், அதன் பணி­யா­ளர்­கள் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க முடிவு செய்­துள்­ளது. நிலை­மையை சமா­ளிக்க, 50 ஆயி­ரம் பேரை தற்­கா­லி­க­மாக நிய­மிக்க இருப்­ப­தாக தெரி­வித்­து உள்­ளது.
இது­ கு­றித்து, அமே­சான் மேலும் தெரி­வித்­துஉள்­ள­தா­வது:ஊர­டங்கு உத்­த­ரவு பல பகு­தி­களில் தளர்த்­தப்­பட்­டி­ருப்­பி­னும், பொருட்­களை வாங்க வெளியே வரத் தயங்­கு­ப­வர்­கள், ஆன்­லைன் மூல­மாக ஆர்­டர் செய்து, பெற்­று­கொள்­கி­றார்­கள். தேவை அதி­க­ரித்­துள்­ளதை அடுத்து, 50 ஆயி­ரம் பேரை கிடங்­கு­கள், வினி­யோ­கம் ஆகிய பிரி­வு­களில் தற்­கா­லி­க­மாக நிய­மிக்க இருக்­கி­றோம். பகுதி நேர வேலை­யி­லும் சேர முடி­யும்.தற்­கா­லி­க­மாக நிய­மிக்­கப்­படும் இவர்­கள், ஏற்­க­னவே பணி­யாற்றி வரு­ப­வர்­க­ளுக்கு, பொருட்­களை எடுப்­பது, பார்­சல் செய்­வது, அனுப்­பு­வது, டெலி­வரி கொடுப்­பது உள்­ளிட்­ட­வற்­றில் உத­வு­வார்­கள்.இவ்­வாறு அமே­சான் தெரி­வித்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement