Advertisement

தங்கம் விலை சவரன் ரூ.624 குறைந்தது

சென்னை : கொரானா வைரஸ் பாதிப்பால் தங்கம் விலை உயர்ந்தது. கடந்த பிப்., 24ம் தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.33,328க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில தினங்களாக கணிசமாக குறைய தொடங்கி உள்ளது. இன்று ஒரே நாளில் சவரன் ரூ.624 குறைந்ததுடன், கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,440 சரிந்துள்ளது.

சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் 22காரட் ஆபரணத்தங்கத்தின் ஒருகிராம் விலை ரூ.78 குறைந்து ரூ.3,986க்கும், சவரன் ரூ.624 குறைந்து ரூ.31,888க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.41,890க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் குறைந்து ரூ.47.40க்கு விற்பனையாகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement