Advertisement

இலக்கை தாண்டிய நிதிப் பற்றாக்குறை

புதுடில்லி : நாட்டின் நிதிப் பற்றாக்குறை, கடந்த ஜனவரி மாதத்தின் இறுதியில், பட்ஜெட் மதிப்பீட்டில், 128.5 சதவீதத்தை தொட்டுள்ளது.


கடந்த நிதியாண்டின், இதே காலகட்டத்தில், நிதிப் பற்றாக்குறை, திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில், 121.5 சதவீதமாக இருந்தது.வருவாய்க்கும், செலவுக்கும் இடையேயான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை, ஜனவரி இறுதியில், 9.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை, 7.66 லட்சம் கோடி ரூபாயாக கட்டுக்குள் வைக்க இலக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பார்லிமென்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, நிதிப் பற்றாக்குறை இலக்கை, உள்நாட்டு உற்பத்தியில், 3.8 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தார்.



இதற்கு முன், இந்த இலக்கு, 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருவாய் பற்றாக்குறை காரணமாக, 3.8 சதவீதமாக அதிகரிக்க வேண்டியதாயிற்று.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement