Advertisement

எட்டு முக்கிய துறைகள் வளர்ச்சி 2.2 சதவீதம்

புதுடில்லி : கடந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் முக்கிய துறைகள், 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டிருப்பதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.


இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டில் உள்ள முக்கிய எட்டு துறைகள், கடந்த ஜனவரி மாதத்தில், 2.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. இதற்கு நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளில் உற்பத்தி அதிகரித்தது காரணமாக அமைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், உள்கட்டுமான துறையில், 1.5 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அதிகரித்துள்ளது.நிலக்கரி, சுத்திகரிப்பு பொருட்கள், மின்சாரம் ஆகிய துறைகளில், உற்பத்தி முறையே, 8 சதவீதம், 1.9 சதவீதம்,2.8 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.


கச்சா எண்ணெய், இயற்கை வாயு, உரம் ஆகிய துறைகள் வளர்ச்சி குறைந்து, எதிர்மறையாக உள்ளன.நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜனவரி வரையிலான காலகட்டத்தில், முக்கிய துறைகளின் வளர்ச்சி குறைந்து, 0.6 சதவீதமாக உள்ளது. இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், வளர்ச்சி, 4.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement