Advertisement

‘ரியல்மி’ மொபைல் போன் விளம்பர துாதர் சல்மான் ஒப்பந்தம்

புதுடில்லி: ‘கடந்த ஆண்டில், உலக அளவில் வேகமாக விற்பனையான ஸ்மார்ட் போன்’ என்ற பெருமையைப் பெற்றுள்ள, ‘ரியல்மி’ புதிதாக அறிமுகம் செய்ய உள்ள போன்களின் விளம்பரத் துாதராக, பாலிவுட் நடிகர் சல்மான் கான், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் மாதவ் சேத் நேற்று கூறுகையில், ‘‘நாடு முழுவதும் நன்றாக தெரிந்த நபராக, நடிகர் சல்மான் கான் விளங்குகிறார். ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்த மாதம் நாங்கள் வெளியிட உள்ள, ‘ரியல்மி – 6 மற்றும் ரியல்மி புரோ’ ஸ்மார்ட் போன்களுக்கு, விளம்பர துாதராக அவர் செயல்படுவார்,’’ என்றார்.ரியல்மி போன்கள், நடுத்தர விலை கொண்ட ஸ்மார்ட் போன்களாக விளங்குகின்றன.தொழில்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • a natanasabapathy - vadalur,இந்தியா

    Appa realmi phone vaankuvathai thavirthu vidalaam

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement