Advertisement

தங்கம் இறக்குமதி 6.77 சதவீதம் சரிவு

புதுடில்லி : கடந்த ஏப்ரல் முதல், டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 6.77 சதவீதம் சரிவை கண்டிருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், தங்கம் இறக்குமதி, 6.77 சதவீதம் சரிவை கண்டுள்ளது.கடந்த நிதியாண்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதி சரிவானது, நாட்டின் வர்த்தக பற்றாக்குறை இடைவெளியை குறைக்க உதவி இருக்கிறது.

தங்கம் இறக்குமதி சரிவுக்கு, அதன் இறக்குமதி மீதான வரி, 10 சதவீதத்திலிருந்து, 12.5 சதவீதமாக அதிகரித்தது முக்கிய காரணம்.புதிய பட்ஜெட்டில், இந்த வரியை குறைக்கும்படி, இத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement