Advertisement

உங்­கள் கிரெ­டிட் ஸ்கோரை பாதிக்­கும் அம்­சங்­கள்

கடன் தகு­தியை தீர்­மா­னிப்­ப­தில் முக்­கிய அங்­கம் வகிக்­கும் கிரெ­டிட் ஸ்கோர் தொடர்­பான விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­துள்­ளது. பில் தொகையை உரிய காலத்­தில் செலுத்­தா­மல் இருப்­பது போன்­றவை கிரெ­டிட் ஸ்கோரை பாதிக்­கும் என்­பதை பல­ரும் உணர்ந்­துள்­ள­னர்.


மேலும் பல அம்­சங்­கள் ஒரு­வ­ரது கிரெ­டிட் ஸ்கோ­ரில்தாக்­கம் செலுத்­த­லாம். கிரெ­டிட் ஸ்கோரை பாதித்து, கட­னுக்­கான வட்டிவிகி­தத்தை அதி­க­மாக்­கும் அம்­சங்­களை அறிந்து
இ­ருப்­பது அவ­சி­யம்:

ரியல் எஸ்­டேட்:


வீட்­டுக்­க­ட­னுக்­காக விண்­ணப்­பிக்­கும் போது, கிரெ­டிட் ஸ்கோர் குறை­வாக இருப்­பது
பாத­க­மா­னது. ஆனால், ஏற்­க­னவே ஒன்று இல்­லது இரண்டு வீடு­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­ராக இருப்­ப­தும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். சொந்த வீடு­கள்உள்­ள­வர்­க­ளுக்கு கடன் அளிப்­பது வர்த்­தக ரியல் எஸ்­டேட்­டாக கரு­தப்­பட்டு, வட்டி விகி­தம் அதி­க­மாக இருக்­கும்.

கிரெ­டிட் கார்டு:

கிரெ­டிட் கார்டை சிறந்த முறை­யில்பயன்­ப­டுத்­தி­னால், அதுவே கிரெ­டிட் ஸ்கோர் உயர
உத­வும். ஆனால், கிரெ­டிட் கார்டை மோச­மாக பயன்­ப­டுத்­தி­னால்பாதிப்பு உண்­டா­கும். குறைந்த பட்ச தொகையைமட்­டும் செலுத்தி, கடனை சுழற்­சி­யில் வைத்­தி­ருந்­தால்,
கிரெ­டிட் ஸ்கோர் குறை­யும்.

கடன் வரம்பு:


கிரெ­டிட் கார்டை பயன்­ப­டுத்­தும் போது,நிலு­வைத்­தொகை இல்­லா­மல் குறித்த நேரத்­தில் கடனை செலுத்தி வந்­தால் மட்­டும் போதாது. கடன் வரம்பை முழு­வ­தும் பயன்­ப­டுத்­திக் ­கொள்­ளா­மல் இருப்­ப­தும் முக்­கி­யம். கார்­டுக்­கான கடன் வரம்பை அதி­க­பட்­சம்
பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தும்பாத­க­மா­னது.

இ.எம்.ஐ., வசதி:


பண்­டிகை காலங்­களில், இ.எம்.ஐ., வச­தி­யில் பொருட்­களை கார்டு மூலம் வாங்­கு­வது
சுல­ப­மாக இருக்­க­லாம். ஆனால், இப்­படி பல பொருட்­களை கார்டு மூல­மான தவணை வச­தி­யில் வாங்­கி­னால், கிரெ­டிட் ஸ்கோர் பாதிக்­கும். பல வங்­கி­க­ளி­டம் இருந்து, உங்­கள் கிரெ­டிட் ஸ்கோர் தொடர்­பான கோரிக்கை சென்­றால், அது பாத­க­மாக கரு­தப்­படும்.

எஸ்.ஐ.பி., முத­லீடு:


பில் தொகையை ஒழுங்­காக செலுத்­து­வது போல, எஸ்.ஐ.பி., முத­லீடு மற்­றும் காப்­பீடு தொகை­யை­யும் உரிய காலத்­தில் செலுத்த வேண்­டும். இவற்­றுக்­கானமாதத்­ தவணை தவ­றி­னால், ஒழுங்­கீ­ன­மான முத­லீட்­டா­ள­ராககரு­தப்­படும் அபா­யம் உள்­ளது. இத­னால்,
கட­னுக்­கானவட்டி விகி­தம் உய­ர­லாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement