Advertisement

நீண்ட கால நோக்கில் பலன் அளிக்கும் எஸ்.ஐ.பி.,

சம­ பங்கு மியூச்­சு­வல் பண்ட்­களில், எஸ்.ஐ.பி., முறை­யில் செய்­யப்­படும் முத­லீடு, நீண்ட கால நோக்­கில் நல்ல பலன் அளிப்­ப­தாக, ‘கிரி­சில்’ அமைப்­பின் ஆய்வு தெரி­விக்­கிறது.

பொது­வா­கவே, நிதி உல­கில் நீண்ட கால நோக்­கில் முத­லீடு செய்ய வேண்­டும் என
வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது. பங்கு முத­லீடு போன்­றவை நீண்ட கால அடிப்­ப­டை­யில் அதிக பலன் தர வல்­லவை.மியூச்­சு­வல் பண்ட் முத­லீடு இதற்கு ஏற்­ற­தாக அமை­கிறது. சம­ பங்கு சார்ந்த மியூச்­சு­வல் பண்ட்­களில், எஸ்.ஐ.பி., எனும் சீரான முத­லீடு முறை­யில் முத­லீடு செய்­ய­லாம்.
சம பங்கு மியூச்­சு­வல் பண்ட் திட்­டங்­களில் பல­னுக்கு உறுதி அளிக்க முடி­யாது என்­றா­லும், நீண்ட கால நோக்­கில் இவை நல்ல பலன் அளித்­தி­ருப்­ப­தாக, ‘கிரி­சில்’ அமைப்பு ஆய்வு
தெரி­விக்­கிறது.

கடந்த, 15 ஆண்­டு­க­ளுக்­கான, சம பங்கு நிதி­க­ளுக்­கான செயல்­பாடு குறி­யீடு அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்வு, எஸ்.ஐ.பி., முத­லீட்­டில் காலம் அதி­க­ரிக்­கும் போது,
எதிர்­மறை பலன் வரு­வ­தற்­கான வாய்ப்பு குறை­வது தெரியவந்­துள்­ளது.மேலும், காலம்
அதி­க­ரிக்­கும் போது,குறைந்த மற்­றும் அதிக பட்ச பல­னுக்­கான இடை­வெ­ளி­யும் குறைந்­துஉள்­ளது.மேலும், முத­லீடு காலம் அதி­க­மாக இருக்­கும் போது, அத­னால் உண்­டா­கும் செல்வ வள­மும்அதி­க­ரிப்­ப­தாக தெரிய வந்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement