Advertisement

தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சரிவு:பொருளாதார நிலையால் இரண்டாவது மாதமாக பாதிப்பு

புதுடில்லி;கடந்த செப்டம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.3 சதவீதம் பின்னடைவை கண்டுள்ளது.சுரங்கம், மின்சாரம், தயாரிப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில், பொருளாதார மந்த நிலை காரணமாக, சரிவு ஏற்பட்டதால், தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து, இரண்டாவது மாதமாக சரிவை கண்டுள்ளது.
முதலீட்டு தேைவ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதமாக இருந்தது. இதுவே, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், 1.1 சதவீதமாக கடும் சரிவை எதிர்கொண்டது.இது குறித்து, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:முதலீட்டு தேவையை குறிக்கும் மூலதனபொருட்கள் துறை வளர்ச்சி, 20.7 சதவீதம் குறைந்து உள்ளது.
மேலும் நுகர்வோர் சாதனங்கள் துறை மற்றும் நுகர்வோர் சாராத சாதனங்கள் துறை ஆகியவற்றின் வளர்ச்சியிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.தயாரிப்பு துறை உற்பத்தி, கடந்த ஆண்டு செப்டம்பரில், 4.8 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு செப்டம்பரில், 3.9 சதவீதமாக குறைந்து உள்ளது.மின் துறை உற்பத்தி, 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இதுவே, 8.2 சதவீதமாக அதிகரித்திருந்தது.மொத்த வளர்ச்சிசுரங்கத் துறை உற்பத்தியும், 8.5 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில், 0.1 சதவீதம் வளர்ச்சியை இத்துறை பெற்றிருந்தது.முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சியும், செப்டம்பரில், 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், 5.2 சதவீதமாக குறைந்திருந்தது.
இந்த முக்கியமான துறைகள், தொழில் துறை உற்பத்தியில், 40 சதவீத பங்களிப்பு கொண்டதாகும்.தயாரிப்பு துறையில் உள்ள, 23 தொழிற்பிரிவுகளில், 17 பிரிவுகளில் வளர்ச்சி குறைந்துள்ளது.ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், மொத்த வளர்ச்சி, 1.3 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக நம்பிக்கையும் குறைந்ததுகடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், வணிக நம்பிக்கை குறைந்துள்ளதாக, ‘என்.சி.ஏ.இ.ஆர்., வணிக நம்பிக்கை குறியீடு’ ஆய்வு தெரிவித்துள்ளது.வணிக நம்பிக்கை குறியீடு, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 103.1 ஆக உள்ளது.
இது, 15.3 சதவீத சரிவாகும். அடுத்த ஆறு மாதங்களில் பொருளாதார நிலை மேம்படுமா என்பது குறித்த ஆய்வில், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 58.9 சதவீதம் பேர் நம்பிக்கை கொண்டிருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் சரிந்து, 46.3 சதவீதத்தினரே நிலைமை சரியாகும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட முக்கியமான ஐந்து துறைகளிலும், வணிக நம்பிக்கை குறைந்துள்ளது.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Ramaswami Sampath - mumbai,இந்தியா

    பொருளாதாரத்தை பற்றி ஒன்றும் தெரியாதென்றால் வல்லுனர்களிடம் ஆலோசனை பெறாமல் மண்டை கனத்தில் எனக்கு எல்லாம் தெரியும் என்று நாட்டை குட்டி சுவராக்கும் நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் நான்கு வருஷத்தில் முழுவதும் சீரழித்து விடும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement