Advertisement

பங்குச் சந்தை

Share

இந்­திய பங்­குச் சந்­தை­கள், கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­கம் ஆகின. இதில் குறிப்­பாக, மும்பை பங்­குச் சந்தை குறி­யீட்டு எண்­ணான சென்­செக்ஸ், மீண்டும் ஒரு முறை, வர­லாற்று உச்­சத்தை இரண்­டா­வது தட­வை­யாக எட்­டி­யது.

இருப்­பி­னும், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண்­ணான நிப்டி, 12 ஆயி­ரம் புள்­ளி­கள் என்ற அளவை கடக்க இய­லா­மல், வார இறு­தி­யில், சிறிய சரி­வு­டன் வியா­பா­ரம் முடி­வுற்­றது.
கடந்த சில வாரங்­க­ளா­கவே, பங்­குச் சந்­தை­கள் உயர்ந்து காணப்­பட்­டன.நடப்பு நிதி­யாண்­டின் இரண்­டாம் காலாண்­டில், நிறு­வ­னங்­களின் நிதி அறிக்­கை­கள் வெளி­வந்த வண்­ணம் உள்ளன.


இதில், குறிப்­பிட்ட சில நிறு­வ­னங்­களின் அறிக்­கை­கள், எதிர்­பார்ப்­புக்கு மேலாக இருந்­த­தன் கார­ண­மாக, அந்­நி­று­வன பங்­கு­கள் விலை உயர ஆரம்­பித்­தது. இது, சந்­தை­யில் சாத­க­மான போக்­குக்கு வழி வகுத்­தது.

மேலும், சர்­வ­தேச சந்­தை­யில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­ களும், நம் சந்­தை­யில் பிர­தி­ப­லித்­தன. உல­கில் உள்ள முன்­னணி நாடு­களின் பெரும்­பா­லான பங்­குச் சந்தை குறி­யீட்டு எண்­கள், அதன் வர­லாற்று உச்­சத்தை அடைந்து வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.மேலும், அமெ­ரிக்­கா­வும், சீனா­வும் வர்த்­தக மோதலை முடி­வுக்கு கொண்டு வரும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்ளன. இதை தொடர்ந்து, முன்பு விதிக்­கப்­பட்ட இறக்­கு­மதி வரி­கள் படிப்­ப­டி­யாக விலக்­கிக் கொள்­ளப்­ப­ட­லாம் என்ற எதிர்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது. இத­னால், பொரு­ளா­தார வளர்ச்சி மீண்­டும்
அதி­க­ரிக்­கும் எனகரு­தப்­ப­டு­கிறது.

இத்­த­கைய கார­ணங்­க­ளால் இந்­திய பங்­குச் சந்­தை­கள் உயர்ந்து வரு­கின்றன. இருப்­பி­னும், இந்­திய பங்­குச் சந்­தை­களின் உயர்வு, வார இறு­தி­யில் கட்­டுக்­குள் கொண்டு வரப்­பட்­டது.
உல­கின் முன்­னணி கருத்­துக்­கணிப்பு நிறு­வ­ன­மான மூடிஸ், இந்­தி­யா­வின் முத­லீட்டு தகுதி நிலையை குறைத்து அறி­வித்­தது. இதன் கார­ண­மாக, வெள்­ளி­யன்று பங்­குச் சந்­தை­கள்
சரி­வைக் கண்­டன.

கடந்த வாரத்­தில், ரியல் எஸ்­டேட், நிதித் துறை மற்­றும் தனி­யார் வங்கி துறை பங்­கு­கள் உயர்ந்­தும், ஊட­கத் துறை, பொதுத் துறை வங்­கி­கள், வாக­னத் துறை, மருத்­து­வத் துறை, தொழில்­நுட்­பத் துறை போன்ற துறை­களின் பங்­கு­கள், சரி­வு­ட­னும் வர்த்­த­கம் ஆகின.இந்த வாரத்­தைப் பொருத்­த­வரை, நிப்டி அதன் ரெசிஸ்­டென்ஸ் 12,035. இதை கடக்க இய­லாத
நிலை­யில், மேலும் சரிந்து வர்த்­த­கம் ஆக வாய்ப்­புள்­ளது.

ரெசிஸ்­டென்ஸ் 12,035 மற்­றும் 12,180; சப்­போர்ட் 11,835 மற்­றும் 11,760.

முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement