Advertisement

2வது காலாண்டு முடிவுகள்

Share

பஜாஜ் பைனான்ஸ்: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், 63.11 சதவீதம் அதிகரித்து, 1,506 கோடி ரூபாயாக உள்ளது.

இதுவே, கடந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 923 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருவாய் 47.95 சதவீதம் அதிகரித்து, 6,322 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வாராக் கடன், 1.61 சதவீதமாகவும், நிகர வாராக் கடன், 0.65 சதவீதமாகவும் உள்ளது.
இந்தியன் வங்கி: இந்தியன் வங்கியின் நிகர லாபம், இரண்டு மடங்கு அதிகரித்து, 359 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே இதற்கு முந்தை நிதியாண்டின் இதே காலாண்டில், நிகர லாபம், 150 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கியின் மொத்த வருவாய் 6,045 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்த வாராக்கடன் சிறிது உயர்ந்து, 7.20 சதவீதமாக உள்ளது. இருப்பினும் நிகர வாராக் கடன், 3.54 சதவீதமாக குறைந்துள்ளது.
கோட்டக் மகிந்திரா வங்கி: இவ்வங்கியின் நிகர லாபம், 38 சதவீதம் அதிகரித்து, 2,407 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில், வங்கியின் நிகர லாபம், 1,747 கோடி ரூபாயாக இருந்தது.வங்கியின் மொத்த வருமானம், மதிப்பீட்டு காலத்தில், 12 ஆயிரத்து, 543 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டு இதே காலாண்டில், 10 ஆயிரத்து, 829 கோடி ரூபாயாக இருந்தது. வங்கியின் வட்டி மூலமான வருவாய், 8,419 கோடி ரூபாய் ஆகும். வாராக் கடன் 2.17 சதவீதம் ஆகும்.ஆக்சிஸ் வங்கி: இவ்வங்கி, இரண்டாவது காலாண்டில், 112 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 790 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. கார்ப்பரேட் வரி மாறுதல் சம்பந்தமான ஒரு முறை செலுத்தும் வரிக்கான பாக்கியான, 2,138 கோடி ரூபாயை செலுத்த வேண்டி இருந்ததால், இம்முறை, 112 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இதை தவிர்த்து பார்த்தால், வரிக்கு பிந்தைய லாபம், 2,026 கோடி ரூபாய் ஆகும்.நிகர வாராக் கடன், கடந்த ஆண்டு இதே காலாண்டில், 2.54 சதவீதமாக இருந்த நிலையில், இந்த காலாண்டில், 1.99 சதவீதமாக உள்ளது.எல் அண்டு டி: எல் அண்டு டி., நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம், 13 சதவீதம் உயர்ந்து, 2,527 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே, கடந்த ஆண்டில், 2,230 கோடி ரூபாயாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாய், 35 ஆயிரத்து, 925 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இது, 31 ஆயிரத்து, 87 கோடி ரூபாயாக இருந்தது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement