Advertisement

பிஎஸ்என்எல்., வாடிக்கையாளருக்கு யப் டிவி சேவை

தெற்கு ஆசியாவில் இணையதளத்தில் ஒளிபரப்பாகும் டிவிக்களில் முதன்மையானது யப் டிவி. இந்நிறுவனம், பிஎஸ்என்எல்., நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல்., வாடிக்கையாளர்கள், யப் இணையதள டிவியை கண்டுகளிக்க முடியும். அலைபேசி மற்றும் இதர தளங்களிலும் இதை பார்க்கலாம்.

யப் டிவி, எப்போதும் வாடிக்கையாளர்களை கவர புதுவிதமான முயற்சிகளை மேற்கொள்ளும். கேட்ச் அப் டிவி, பர்ஸ்ட் டே பர்ஸ் ஷோ, ஆப்-இன்-ஆப், நேரலை நிகழ்வுகள், கிரிக்கெட் நேரலை, வெப்சிரீஸ் என ஏகப்பட்ட புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை உள்ளடக்கி உள்ளன.

இதில் 250 டிவி சேனல்கள் ஒளிரப்பாவதுடன், 13 மொழிகளில் 3000க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. யப் டிவி, உலக தரத்திலான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள கண்டெண்ட்களைக் கொண்டுள்ளன. பிஎஸ்என்எல்., நிறுவனத்துக்கு சுமார் 120 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் யப் டிவியை கண்டுகளிக்க முடியும்.

தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையில் கிராமம் - நகர்ப்புறங்களில் உள்ள டிஜிட்டல் குறைபாடுகளை தீர்க்கும் வகையில் செயல்படும் நிறுவனங்களில் பிஎஸ்என்எல் முக்கியமானது. அதே போன்று யப் டிவியும் அதே நோக்கி பயணிப்பதால் இந்த இரு நிறுவனங்கள் இணைந்து இருப்பது முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Muraleedharan.M - Chennai,இந்தியா

    கண் போன பிறகு சூரிய நமஸ்காரயம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement