Advertisement

சேமிப்பு கணக்குக்கான வட்டி குறைத்து அறிவித்தது எஸ்.பி.ஐ.,

புது­டில்லி:நாட்­டின் மிகப்­பெ­ரிய பொதுத்­துறை வங்­கி­யான, எஸ்.பி.ஐ., கட­னுக்­கான வட்­டி­ வி­கி­தத்தை, ஆறா­வது முறை­யாக குறைத்து அறி­வித்­துள்­ளது.

எஸ்.பி.ஐ., வங்கி அதன், எம்.சி.எல்,ஆர்., அடிப்­ப­டை­யி­லான, கட­னுக்­கான வட்­டி­யில், 0.10 சத­வீ­தம் குறைத்து அறி­வித்­துள்­ளது. நடப்பு நிதி­யாண்­டில் இது, ஆறா­வது முறை­யாக குறைக்­கப்­பட்­டுள்­ளது.இந்த, எம்.சி.எல்.ஆர். அடிப்­ப­டை­யி­லான வட்டி குறைப்பு, இன்று முதல் நடை­மு­றைக்கு வரு­கிறது. இத­னை­ய­டுத்து, வட்­டி­யா­னது, 8.15 சத­வீ­த­மாக இருந்­தது, 8.05 சத­வீ­த­மாக குறை­கிறது.


கட­னுக்­கான வட்­டியை குறைத்து அறி­வித்­தி­ருக்­கும் அதே நேரத்­தில், வங்­கி ­யின் சேமிப்பு கணக்கு டெபா­சிட்­டு­க­ளுக்­கும் வட்­டி­யை­யும் குறைத்­துள்­ளது.ஒரு லட்­சம் ரூபாய்க்­குள் இருக்­கும் சேமிப்­புக் கணக்கு டெபா­சிட்­டு­க­ளுக்கு, 0.25 சத­வீ­தம் வட்­டியை குறைத்து, 3.25 சத­வீ­த­மாக அறி­வித்­துள்­ளது. இந்த வட்டி குறைப்பு நவம்­பர் 1ம் தேதி முதல் நடை­மு­றைக்கு வரு­கிறது.
ஓராண்­டுக்கு மேல் ஈராண்­டுக்­குள் உள்ள நிரந்­தர வைப்­புத் தொகைக்­கும் வட்­டியை, 0.10 சத­வீ­தம் முதல், 0.30 சத­வீ­தம் வரை குறைத்து அறி­வித்­துள்­ளது. இது­வும் இன்று முதல் நடை­மு­றைக்கு வரு­கிறது.


ரிசர்வ் வங்கி ரெப்போ வட்­டியை குறைத்து அறி­வித்­த­தை­ய­டுத்து, எஸ்.பி.ஐ., இந்த வட்டி குறைப்பை அறி­வித்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement