Advertisement

பழைய கார்கள் விற்பனை 10 சதவீதம் அதிகரிக்கும்

புதுடில்லி:புதிய கார்களின் விற்பனை, சரிவை கண்டு வரும் நிலையில், நடப்பு ஆண்டில், பழைய கார்களின் விற்பனை, 10 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என, ‘ஓ.எல்.எக்ஸ்., ஆட்டோ நோட் ஸ்டடி’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


இது குறித்து, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:நடப்பு ஆண்டில், பழைய கார்களின் விற்பனை, 10 சதவீதம் அதிகரித்து, 44 லட்சம் கார்கள் விற்பனையாகும். பயன்படுத்திய கார்களை வாங்குவதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம். கடந்த, 2018ல், பழைய கார்களின் விற்பனை, 40 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.



இது, 2020ல், 50 லட்சமாக அதிகரிக்கும். 2023ல், 66 லட்சம் கார்களாக அதிகரிக்கும்.தற்போது, 1 லட்சத்து, 800 கோடி ரூபாயாக இருக்கும் பழைய கார்களின் சந்தை, 2023ல், 1.80 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. பழைய கார்களை வாங்குபவர்களில், தற்போது, 50 சதவீதத்தினர் இளைஞர்களாக உள்ளனர். பழைய கார்களை வாங்குவதில் மட்டுமின்றி, ‘ஆன்லைன்’ மூலமாக பழைய கார்களை விற்பதிலும், இளைஞர்களின் பங்கு அதிகமாக அதாவது, 54 சதவீதமாக உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement