Advertisement

தங்கம் விலை ஒரே நாளில் சவரன் ரூ.664 சரிவு

சென்னை : தங்கம் விலை இருதினங்களுக்கு முன்னர் சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட நிலையில் இன்று(செப்.,6) ஒரே நாளில் சவரன் ரூ.664 குறைந்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று, காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.41 குறைந்து ரூ.3700க்கும், சவரன் ரூ.328 குறைந்து ரூ.29,600க்கு விற்பனையாகிறது. 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.38,570க்கு விற்பனையானது.

தொடர்ந்து மாலையில் மேலும் குறைந்தது தங்கம் விலை. 22காரட் ஒருகிராம் ஒருகிராம் தங்கம் விலை ரூ.3,658-க்கும், சவரன் ரூ.664 குறைந்து ரூ.29,264க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.38,150க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சரிந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.2.30 காசுகள் குறைந்து ரூ.52.50க்கும், மாலையில் மேலும் குறைந்து ரூ.51.30க்கும் விற்பனையானது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement