Advertisement

அறிக்கையை இறுதி செய்தது பிமல் ஜலான் கமிட்டி

புது­டில்லி:ரிசர்வ் வங்கி, உபரி நிதி­யாக எவ்­வ­ளவு இருப்பு வைத்­துக் கொள்­ள­லாம் என்­பது
தொடர்­பான அறிக்­கையை, பிமல் ஜலான் கமிட்டி, இறுதி செய்­துள்­ளது.


ரிசர்வ் வங்­கி­யில், உபரி நிதி­யாக எவ்­வ­ளவு இருப்பு வைத்­துக் கொள்­ள­லாம் என்­பது குறித்து முடிவு செய்­வ­தற்­காக, ரிசர்வ் வங்­கி­யின் முன்­னாள் கவர்­னர், பிமல் ஜலான் தலை­மை­யில், ஒரு கமிட்டி அமைக்­கப்­பட்­டது.



ரூ.9 லட்சம் கோடி


இந்த கமிட்டி, தன் அறிக்­கையை இறுதி செய்­து­விட்­ட­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.
ஆறு பேரை உறுப்­பி­னர்­க­ளா­கக் கொண்ட, பிமல் ஜலான் கமிட்டி, கடந்த ஆண்டு, டிசம்­பர், 26ல், அமைக்­கப்­பட்­டது.பிற நாடு­களின் மத்­திய வங்­கி­கள் வைத்­தி­ருக்­கும் உபரி நிதி­யோடு ஒப்­பிட்டு, இந்­திய ரிசர்வ் வங்கி, உபரி நிதியாக, எவ்­வ­ளவு இருப்பு கொள்­ள­லாம் என்­பது குறித்­தும், அதிக இருப்பை மத்­திய அர­சுக்கு வழங்­கு­வது குறித்­தும் ஆராய, இந்த கமிட்டி அமைக்­கப்­பட்­டது.


ரிசர்வ் வங்கி வசம், தற்­போது உபரி நிதி­யாக, 9 லட்­சம் கோடி ரூபாய் உள்­ள­தாக தெரி­கிறது.
இந்­நி­லை­யில், பிமல் ஜலான் கமிட்டி, தன் அறிக்­கையை இறுதி செய்து விட்­ட­தாக தெரி­கிறது.
அறிக்கை ஏற்­க­னவே கிட்­டத்­தட்ட இறு­தி­யாகி இருந்த நிலை­யில், கமிட்டி உறுப்­பி­ன­ராக இருந்த, பொரு­ளா­தார விவ­கா­ரத் துறை செய­ல­ராக இருந்த, சுபாஷ் சந்­திர கார்க், மின்­சா­ரத் துறைக்கு மாற்­றப்­பட்­ட­தால், கமிட்­டிக்­கான காலக்­கெடு நீட்­டிக்­கப்­பட்­டது.


இதன் பிறகு, அந்த இடம், நிதித் துறை செய­லர், ராஜிவ் குமா­ரால் நிரப்­பப்­பட்­ட­தும், அறிக்கை இறுதி செய்­யப்­பட்­டுஉள்­ளது.இடைவெளிஇதற்கு மேல் கமிட்டி கூடப்­போ­வது இல்லை என்­றும், இன்­னும் இரண்­டொரு நாட்­களில் அறிக்கை, ரிசர்வ் வங்கி கவர்­ன­ரி­டம் வழங்­கப்­படும் என­வும், தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.



கமிட்டி அறிக்­கை­யின் படி, மத்­திய அர­சுக்கு, ரிசர்வ் வங்கி எவ்­வ­ளவு நிதி வழங்­கும் என்­பது குறித்து, உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது:மூன்று முதல், ஐந்து ஆண்­டு­க­ளுக்­குள்­ளாக, குறிப்­பிட்ட கால இடை­வெ­ளி­களில், உபரி நிதி­யா­னது, மத்­திய அர­சுக்கு வழங்­கப்­படும் என்று மட்­டும் இப்­போது என்­னால் சொல்ல முடி­யும்.ரிசர்வ் வங்கி வழங்­கும் உபரி நிதியால், மத்­திய அரசு தாரா­ள­மாக நிதிப் பற்­றாக்­கு­றையை சமா­ளிக்க முடி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement