Advertisement

தங்கம் விலை புதிய உச்சம்: ரூ.29 ஆயிரத்தை தாண்டியது

Share

சென்னை : தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று(ஆக.,13) புதிய உச்சமாக சவரன் ரூ.192 உயர்ந்து, ரூ.29 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.3,612க்கும், சவரன் ரூ.28,896க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,690க்கும் விற்பனையானது.

மாலையில் இன்னும் அதிகரித்தது தங்கம் விலை. 22காரட் ஒரு கிராம் ஆபணரத்தங்கத்தின் விலை ரூ.3,627க்கும், சவரன் ரூ.192 உயர்ந்து ரூ.29,016க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.37,840க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.40 காசுகள் உயர்ந்து ரூ.49க்கு விற்பனையாகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement