Advertisement

‘ஜியோ பைபர்’ செப்டம்பரில் அறிமுகம் : ஆண்டு பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவிப்பு

Share

மும்பை:‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின், 42வது ஆண்டு பொதுக் கூட்டம், நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அந்த நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி, பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.செப்., 5ம் தேதியிலிருந்து, ஜியோ ஜிகாபைபர் திட்டம் அறிமுகமாவதாக தெரிவித்தார்.‘‘ஜியோ ஜிகாபைபர்இணைப்பு பெறும் வாடிக்கையாளர்களுக்கு, லேண்ட்லைன் மூலமான அழைப்புகள் முற்றிலும் இலவசம்,’’ என, பலத்த வரவேற்பிற்கிடையே தெரிவித்தார்.
மேலும், குறைந்தபட்சம், 100 எம்.பி.பி.எஸ்., வேகத்தில், பிராட்பேண்டு சேவை மற்றும் குறைந்தபட்ச சந்தா தொகையான மாதம், 700 ரூபாய் சந்தாவுடன், ‘அல்ட்ரா எச்.டி., டிவி டிஷ்’ ஆகியவை இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார், முகேஷ் அம்பானி.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் குறித்து பேசும்போது, இந்நிறுவனத்தின், எண்ணெய் மற்றும் ரசாயன வணிகத்தில், 20 சதவீத பங்குகளை, 1.06 லட்சம் கோடி ரூபாய்க்கு, சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான, ‘அராம்கோ’ நிறுவனத்திற்கு விற்பனை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் எரிபொருள் சில்லரை விற்பனை வணிகத்தில், 49 சதவீத பங்குகளை, பிரிட்டனைச் சேர்ந்த, பி.பி., நிறுவனத்துக்கு, 7,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இருப்பதாகவும், இந்த பங்கு விற்பனைகள் மூலம், 18 மாதத்திற்குள்ளாக கடனே இல்லாத நிறுவனமாக மாறும் என்றும் அறிவித்தார்.
அராம்கோ நிறுவனத்துடன் செய்து கொள்ளும் ஒப்பந்தம் மூலமாக, இந்தியாவில் மிக அதிக அளவில் செய்யப்படும், அன்னிய முதலீடு இதுவாகத் தான் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும், அராம்கோ, ஜாம் நகரில் உள்ள, ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு, தினசரி, 7 லட்சம் பேரல் எண்ணெயை, நீண்ட கால அடிப்படையில் வழங்கும் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், அராம்கோ நிறுவனமும், பெட்ரோல் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்கான கூட்டுத் தொழிலுக்கு ஒப்பந்தம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.இக்கூட்டத்தில், பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள, நிலையான அரசு சூழல் குறித்தும், இந்தியாவின் பொருளாதார வலிமை குறித்தும், மிகவும் பாராட்டி பேசினார், முகேஷ் அம்பானி.அம்பானி சொன்னது.
இந்தியா, 2030ம் ஆண்டில் 10 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக உயரும்! சில துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலை தற்காலிகமானது. இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை மிகவும் வலிமையானது.இதர முக்கிய அறிவிப்புகள் ‘ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல்’ ஆகிய நிறுவனங்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
புதிய, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு, இணைய கிளவுட் கட்டமைப்பு வசதி இலவசமாக வழங்கப்படும் ரிலையன்ஸ், ‘இ – காமர்ஸ்’ வலைதளம் மூலமாக, சிறு வணிகர்கள், இனி பெரிய நிறுவனங்கள், பெரிய வணிகர்கள் மற்றும் பிற வலைதளங்கள் மூலம் செயல்படுவதைப் போல செயல்படலாம்
‘இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ எனும், இணைய சாதனங்கள் இணைப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி, 1ம் தேதி முதல் அறிமுகம் ஆகிறது புதிய கிளவுட் டேட்டா சென்டர்களை அறிமுகப்படுத்துவதற்காக, ரிலையன்ஸ் ஜியோ, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்துடன் நீண்ட கால கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது.ஜியோ பைபர் சிறப்பம்சங்கள்  செப்டம்பர் 5ம் தேதியிலிருந்து அறிமுகம் லேண்ட்லைனில் போன் அழைப்புகள் முற்றிலும் இலவசம் பிராட்பேண்டின் அடிப்படை குறைந்தபட்ச வேகம், 100 எம்.பி.பி.எஸ்.குறைந்தபட்ச சந்தா, 700 ரூபாய்
அதிகபட்ச சந்தா, 10 ஆயிரம் ரூபாய் எச்.டி., டிவி, டிஷ் இலவசம் வரும், 2020ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து, பிரீமியம் வாடிக்கையாளர்கள், புதிய திரைப்படங்களை, அவை வெளியாகும் அதே நாளில் பார்க்கலாம் லேண்ட்லைன் மூலம், 500 ரூபாய் வாடகையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பேசிக் கொள்ளலாம் ஜியோவின் ஒருங்கிணைந்த நெட்வொர்க், ‘5ஜி’ சேவைக்கு ரெடியாக இருக்கிறது வீட்டிலிருந்தே காணொலி காட்சி சந்திப்புகளை நடத்தலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement