Advertisement

கமாடிட்டி சந்தை

கச்சா எண்ணெய்



சர்­வ­தேச சந்­தை­யில், கச்சா எண்­ணெய் விலை, கடந்த, 4 வாரங்­க­ளாக சரி­வில் வர்த்­த­க­மாகி வரு­கிறது. இருப்­பி­னும், கடந்த வார இறுதி நாட்­களில், விலை உயர்ந்து வர்த்­த­க­மாகி வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.



உல­கின், இரண்­டாம் மிகப்­பெ­ரிய எண்­ணெய் உற்­பத்தி நாடான, சவுதி அரே­பியா, தொடர்ந்து கச்சா எண்­ணெய் விலை சரிந்து வரும் சூழ­லில், விலை சரி­வைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கு­டன், சில முடி­வு­களை எடுத்து வரு­கிறது.குறிப்­பாக, அடுத்த மாதத்­திற்­கான ஏற்­று­மதி மற்­றும் ஏற்­று­மதி ஒப்­பந்­தங்­களை, இந்­நாடு குறைத்து வரு­கிறது.



இதன் கார­ண­மாக, சந்­தை­யில் தட்­டுப்­பாடு நில­வும் என்ற அச்­சத்­தில், வார இறுதி நாட்­க­ளான, வியா­ழன் மற்­றும் வெள்ளி தினங்­களில், விலை சற்று உயர்ந்து வர்த்­த­க­மா­கி­யது.ஏப்­ரல் முதல் கடந்த வாரம் வரை, 20 சத­வீ­தத்­துக்­கும் மேல், எண்­ணெய் விலை சரிந்­துள்­ள­தால், கச்சா எண்­ணெய் உற்­பத்தி செய்­யும் நாடு­க­ளின் பொரு­ளா­தா­ரத்­தில் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.


மேலும், பல சுத்­தி­க­ரிப்பு எண்­ணெய் நிறு­வ­னங்­கள் நஷ்­டத்­தில் இயங்கி வரு­வ­தா­க­வும், விலை சரிவை கட்­டுக்­குள் கொண்­டு­வர வேண்­டும் என்­றும், அனைத்து எண்­ணெய் உற்­பத்தி நாடு­களும் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.‘ஒபெக்’ எனும், கச்சா எண்­னெய் உற்­பத்தி நாடு­க­ளின் கூட்­ட­மைப்­பின் சந்­திப்பு, அடுத்த மாதம், 12ம் தேதி, துபா­யில் நடை­பெற உள்­ளது.



இதில், ஏற்­க­னவே செய்­யப்­பட்­டுள்ள ஒப்­பந்­தப்­படி, உறுப்பு நாடு­கள், தங்­க­ளது உற்­பத்தி குறைப்பு நட­வ­டிக்­கையை சரி­யாக பின்­பற்றி வரு­கின்­ற­னவா என்­பது பற்றி ஆரா­யப்­படும்.மேலும், விலை ஏற்­றப் போக்­கினை கட்­டுக்­குள் கொண்­டு­வர, உற்­பத்­திக் குறைப்பை மேலும் அதி­க­ரிக்­க­லாம் என்ற கருத்­தும் நிலவி வரு­கிறது.இது­போன்ற கார­ணங்­க­ளால், இந்த கூட்­டம் மிக முக்­கி­ய­மா­ன­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது.


சவுதி அரே­பி­யா­வின் தின­சரி எண்­ணெய் உற்­பத்தி, ஜூலை மாதத்­தில், 9.7 மில்­லி­யன் பேரல்­கள் ஆக இருந்­தது. இது அதன் உற்­பத்தி இலக்­கைக் காட்­டி­லும் குறை­வா­கும்.மேலும், ஒட்­டு­மொத்த, ஒபெக் உறுப்பு நாடு­க­ளின் உற்­பத்­தி­யும், ஜூலை மாதத்­தில், ஐந்து வருட குறை­வில் இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இருப்­பி­னும், தற்­போது ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார மந்த சூழல் கார­ண­மாக, கச்சா எண்­ணெய் தேவை­யில் ஏற்­பட்­டுள்ள தொய்வு கார­ண­மாக, விலை உய­ரா­மல், கடந்த சில வாரங்­க­ளாக சரிந்து வரு­கிறது. இதற்கு, அதி­க­ரித்து வரும், அமெ­ரிக்­கா­வின் உற்­பத்­தி­யும், ஒரு முக்­கிய கார­ண­மா­கும்.



தங்கம் வெள்ளி

சர்­வ­தேச சந்­தை­யில், கடந்த வாரம், தங்­கம் மற்­றும் வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, தலா, 5 சத­வீ­தம் உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பின் ஏற்­பட்ட அதி­கப்­ப­டி­யான, வார அள­வி­லான, விலை உயர்வு இது­வே­யா­கும்.


அமெ­ரிக்க மத்­திய வங்கி, கடந்த மாத இறு­தி­யில், 10 ஆண்­டு­க­ளுக்­குப் பின், வட்டி விகி­தத்தை முதன்­மு­றை­யா­கக் குறைத்­தது. இதற்கு, பொரு­ளா­தார வளர்ச்சி குறைவே கார­ண­மா­கும்.
ஆசி­யா­வைப் பொருத்­த­வரை, நியூ­சி­லாந்து, தாய்­லாந்து, இந்­தியா ஆகிய நாடு­களும், இந்த ஆண்­டில், வட்டி விகி­தத்தை குறைத்­தது குறிப்­பி­டத்­தக்­கது.


இவ்­வா­றாக, வட்டி விகி­தங்­கள் குறைக்­கப்­படும் போது, அரசு கரு­வூ­லங்­களில் செய்த முத­லீ­டு­க­ளுக்­கான ஆதா­யம் குறை­யும். அதன்­படி, பெரும்­பா­லான நாடு­களில், நீண்­ட­கால கரு­வூல ஆதா­யங்­கள் குறைந்து வரு­வ­தால், முத­லீட்­டா­ளர்­கள் மத்­தி­யில் பெரும் அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இதற்கு மாற்­றாக, பாது­காப்பு கருதி, தங்­கம் மீதான முத­லீடு அதி­க­ரித்து வரு­கிறது.
முன்­னர் குறிப்­பிட்­டி­ருந்­தது போலவே, வட்டி விகி­த­மும், தங்­கம் மற்­றும் வெள்ளி விலை­யும் எதிர்­ம­றை­யான போக்­கினை கொண்­ட­தா­கும்.




அதா­வது, வட்டி விகி­தம் குறைக்­கப்­ப­டும்­போது, அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு சரிவு கார­ண­மாக, கமா­டிட்டி பொருட்­கள் விலை உய­ரும்.இதன்­படி, ஜூன் மாதம் முதல், தங்­கம் உள்­ளிட்­ட­வற்­றில், விலை ஏற்­றம் காணப்­ப­டு­கிறது.நடப்பு ஆகஸ்ட் மாதத்­தில், இது­வரை, ஓர் அவுன்ஸ் தங்­கம், சுமார், 115 அமெ­ரிக்க டாலர் அள­வுக்கு உயர்ந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது. ஓர் அவுன்ஸ் என்­பது, 31.104 கிராம் ஆகும்.



மேலும், உல­கின் மிகப்­பெ­ரிய நாடு­க­ளான அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் தொடர்ந்து வர்த்­தக மோத­லில் ஈடு­பட்டு வரு­கின்­றன. இதன் கார­ண­மாக, பொரு­ளா­தார வளர்ச்சி மேலும் குறை­யும் என்ற அச்­சத்­தி­னா­லும், பாது­காப்பு கரு­தி­யும், தங்­கம் மீதான முத­லீடு அதி­க­ரித்து வரு­கிறது.உள்­நாட்­டில், ஆப­ர­ணத் தங்­கத்­தின் விலை, சர்­வ­தேச சந்­தை­யைக் காட்­டி­லும் உயர்ந்து வரு­வ­தற்கு, டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு கடு­மை­யாக சரிந்து வரு­வது ஒரு கார­ண­மா­கும்.



தற்­போது, ஓர் அமெ­ரிக்க டால­ருக்கு எதி­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, சுமார், 70 ரூபாய் என்ற நிலை­யில், மேலும் மதிப்பு சரிவு ஏற்­பட்டு, உள்­நாட்டு சந்­தை­யில், ஆப­ர­ணத் தங்­கத்­தின் விலை, மீண்­டும் உய­ரும் போக்கே காணப்­ப­டு­கிறது.


செம்பு



இந்த ஆண்­டின் பெரும்­பா­லான நாட்­களில், தொடர் சரி­வில் வர்த்­த­க­மாகி வந்த செம்பு விலை, கடந்த வாரம், சற்று அதி­க­ரித்து, வர்த்­த­க­மாகி முடி­வுற்­றது. தற்­போ­தைய சூழ­லில், அமெ­ரிக்கா மற்­றும் சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே நடந்­து­வ­ரும் வர்த்­தக மோதல் கார­ண­மாக, பொரு­ளா­தார வளர்ச்சி பாதிக்­கப்­படும் என்­ப­தால், தேவை குறைந்து, விலை உயர்வு கட்­டுக்­குள் வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.


உலக அள­வில், செம்பு நுகர்­வில், சீனா முத­லி­டம் வகிக்­கிறது. ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் கார்­க­ளுக்கு, அதி­கப்­ப­டி­யான வரி விதிக்­கப்­படும் என்று, அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருந்­தது. இதன் பின் ஏற்­பட்ட பேச்­சு­களில், வரி அதி­க­ரிப்பை விலக்­கிக்­கொள்­வ­தான போக்கு நிலவி வரும் சூழ­லில், செம்பு விலை ஏற்­றம் கண்­டது.


இருப்­பி­னும், லண்­டன் பொருள் வர்த்­தக சந்­தை­யில், செம்பு இருப்பு அதி­க­ரித்து வரு­வ­தால் விலை ஏற்­றம் கட்­டுப்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement