Advertisement

பங்குச் சந்தை

Share

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண், ’நிப்டி’, ஐந்து வார தொடர் சரி­வுக்­குப் பின், கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­க­மாகி, முடி­வுற்­றது. கடந்த வாரம், நாம் குறிப்­பிட்­டி­ருந்­தது போல, 100 வார சரா­சரி அள­வான,10,780 புள்­ளி­கள் என்ற நிலை­யைத் தொட்டு, அதி­லி­ருந்து உயர்ந்து, வர்த்­த­க­மாகி முடி­வுற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.அதா­வது, வார இறு­தி­யில், மொத்­தம், 400 புள்­ளி­க­ளுக்கு மேல் உயர்ந்து, 11,109 என்ற நிலை­யில் வர்த்­த­க­மாகி முடி­வுற்­றது.இந்த ஆண்டு, ஜன­வரி முதல் ஜூலை வரை­யி­லான கால­கட்­டத்­தில், நாட்­டின் வாகன விற்­பனை துறை கடு­மை­யான சரிவை சந்­தித்­துள்­ளது. கன­ரக வாக­னங்­கள் முதல் பய­ணி­யர் வாக­னங்­கள் வரை, அனைத்து வகை வாக­னங்­கள் விற்­ப­னை­யி­லும் சரிவு ஏற்­பட்­டது.


இத­னால், வாகன தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், உதிரி பாகங்­கள் தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள், இத்­து­றை­யைச் சார்ந்­தி­ருக்­கும் பிற நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் பங்­கு­க­ளின் விலை, கடந்த, 6 மாதங்­களில் கடு­மை­யாக சரிந்­துள்­ளது. இத­னால், முத­லீட்­டா­ளர்­கள் பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். பொது­வாக, வாகன விற்­பனை சரிவு என்­பது, நுகர்­வோர் மத்­தி­யில், வாங்­கும் திறன் குறை­வா­க­வும், பண­வீக்க விகி­தம் அதி­க­ரித்து இருப்­ப­தை­யும் சுட்­டிக் காட்­டும்.மேலும், பங்­கு­க­ளின் விலை சரி­வுக்கு கார­ண­மாக இருந்த, அன்­னிய முத­லீட்­டா­ளர்­க­ளின் அதி­க­மான வரு­வாய் மீது, மத்­திய பட்­ஜெட்­டில் கொண்­டு­வ­ரப்­பட்ட புதிய வரி விதிப்பு கார­ண­மாக, ஜூலை மாதத்­தில் பெரும்­பா­லான வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­கள், தங்­கள் முத­லீ­டு­க­ளைத் திரும்­பப் பெற்­ற­னர்.இதன் கார­ண­மாக, சந்தை, கடு­மை­யான சரிவை சந்­தித்­தது, குறிப்­பி­டத்­தக்­கது.கடந்த வாரம், பிர­த­மர் அலு­வ­ல­கம் மற்­றும் நிதி அமைச்­ச­கம் இப்­பி­ரச்னை குறித்து பரி­சீ­லித்து வரு­வ­தாக அறி­வித்­தது. இதன் கார­ண­மாக, வார இறுதி நாட்­களில், பங்­குச் சந்­தை­கள், சரி­வில் இருந்து மீண்டு, அதி­க­ரித்து வர்த்­த­கம் ஆகின.வாகன உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ஜி.எஸ்.டி.,யை குறைக்­கும்­படி தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கின்­றன. தற்­போது, 28 சத­வீ­தம், ஜி.எஸ்.டி., விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதை, 18 சத­வீ­த­மா­கக் குறைக்க வேண்­டும் என, வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் அமைப்பு கோரிக்கை வைத்­துள்­ளது.இந்­திய பொரு­ளா­தா­ரம், தற்­போது வளர்ச்­சிப் பாதை­யில் இருந்து விலகி, மந்­த­மான போக்­கில் இருப்­பது, ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகி­தத்தை குறைப்­ப­தி­லி­ருந்து அறிந்­து­கொள்ள முடி­கிறதுஇந்த ஆண்­டில், இது­வரை, 4 முறை வட்டி விகி­தம் குறைக்­கப்­பட்­டுள்­ளது. இதில், கடந்த, 7ம் தேதி, எதிர்­பார்த்­ததை விட, 10 புள்­ளி­கள் அதி­க­மாக குறைக்­கப்­பட்­டது.


தற்­போ­தைய, ரெப்போ வட்டி விகி­தம், 2010ம் ஆண்­டில் இருந்த வட்டி விகி­தத்­திற்கு நிக­ராக குறைந்­துள்­ளது.டால­ருக்கு நிக­ரான, இந்­திய ரூபா­யின் மதிப்பு, தொடர் சரி­வில் இருக்­கிறது. தற்­போது, 70 ரூபாய்க்கு மேல் வர்த்­த­க­மா­கும் சூழ­லில், அதிக கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்­யும் நாடாக நாம் இருப்­ப­தால், நாட்­டின், நடப்­புக் கணக்கு பற்­றாக்­குறை மேலும் அதி­க­ரிக்­கும் என்ற நிலையே தற்­போது உள்­ளது.சர்­வ­தேச அள­வில், அமெ­ரிக்கா மற்­றும் சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே நடந்து வந்த வர்த்­தக மோதல், மீண்­டும் தலை­துா­க்­கி­யுள்­ளது. இம்­மாத ஆரம்­பத்­தில், அமெ­ரிக்க அதி­பர், 60 பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான, புதிய இறக்­கு­மதி வரியை, சீனப் பொருட்­க­ளின் மீது விதித்­தார்.இதன் கார­ண­மாக, இரு நாடு­க­ளுக்­கும் இடையே மீண்­டும் வர்த்­த­கப் போர் துவங்­கி­யுள்­ளது. கடந்த வெள்­ளி­யன்று, சுமூ­கப் பேச்­சு­வார்த்­தைக்கு சீனா உடன்­பட்­டி­ருந்த நிலை­யில், அமெ­ரிக்க அதி­பர் அதற்கு மறுப்பு தெரி­வித்­துள்­ளார்.


மேலும், வட்டி விகி­தத்தை மீண்­டும் குறைக்­கு­மாறு, அமெ­ரிக்க மத்­திய வங்­கிக்கு வேண்­டு­கோ­ளும் வைத்­துள்­ளார்.இந்த வாரம், நிப்­டி­யைப் பொருத்­த­வரை, அதன் ரெசிஸ்­டென்ட்ஸ், 11,140 மற்­றும் 11,230 ஆகும். சப்­போர்ட் 11,055, 10,980 ஆகும்.


முருகேஷ் குமார்

murukesh.kumar@choiceindia.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement