Advertisement

பயணியர் வாகனங்கள் விற்பனை சரிவு

புதுடில்லி: பயணியர் வாகன விற்பனை, ஜூன் மாதத்தில், 4.6 சதவீதம் சரிந்துள்ளதாக, எப்.ஏ.டி.ஏ., எனும், வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 4.6 சதவீதம் சரிந்து, மொத்தம், 2.25 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், 2.36 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன. இரு சக்கர வாகனங்கள் விற்பனை, 5 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில், 13.95 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், நடப்பாண்டு ஜூனில், 13.25 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

வர்த்தக வாகனங்கள் விற்பனையும், 19.3 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம், 48 ஆயிரத்து, 752 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜூனில், 60 ஆயிரத்து, 378 வாகனங்களாக அதிகரித்து இருந்தது.அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து, ஜூன் மாதத்தில், மொத்தம், 5.4 சதவீதம் சரிவை சந்தித்து, 16.47 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த ஜூனில், 17.41 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு வாகன முகவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement