சிறப்பான வளர்ச்சியில் குடும்ப வணிக நிறுவனங்கள்
புதுடில்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்தியாவில் உள்ள குடும்ப வணிக நிறுவனங்களில், 89 சதவீத நிறுவனங்கள் வளர்ச்சி பெறும் என, ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.
பி.டபுள்யு.சி., நிறுவனம், ’குடும்ப வணிகங்கள் ஆய்வு – 2019’ எனும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அடுத்த இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சியுறும், 89 சதவீத நிறுவனங்களில், 44 சதவீத நிறுவனங்கள் வேகமான வளர்ச்சியையும், 45 சதவீதம் நிலையான வளர்ச்சியையும் காணும்.
மேலும், 60 சதவீத நிறுவனங்கள், நிர்வாகத்தை அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் திட்டத்துடன் உள்ளன. 92 சதவீத குடும்ப நிறுவனங்கள், குடும்பத்தின் பிறஉறுப்பினர்கள் பணியாற்ற அனுமதிக்கின்றன. இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!