Advertisement

நிலம் வாங்க வங்கி உதவி; ‘கிரெ­டாய்’ கோரிக்கை

புது­டில்லி: சகாய விலை வீடு திட்டங்­களில், கட்­டு­மான நிறு­வ­னங்­க­ளுக்கு, நிலம் வாங்க, வங்­கி­கள் நிதி­யு­தவி வழங்க வேண்­டும் என, இந்­திய ரியல் எஸ்­டேட் மேம்­பாட்­டா­ளர்­கள் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, ’கிரெ­டாய்’ நிதி­ய­மைச்­ச­கத்தை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

இது குறித்து, ‘கிரெ­டாய்’ மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: கட்­டு­மா­னங்­களில், நிலத்­தின் மதிப்பு மட்­டுமே, திட்­டத்­தின் மதிப்­பில், 40 சத­வீ­தம் அளவுக்கு ஆகி­வி­டு­கிறது. நிலம் வாங்­கும்­போதே, வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மிருந்து, நிதி பெற முடி­யா­த­தால், பெரும்­பா­லும், வங்கி சாரா நிறு­வ­னங்­கள் அல்­லது தனி­யார் முதலீடுகள் மூல­மா­கத்­தான் நிலம் வாங்க நிதி திரட்ட முடி­கிறது.

ஆனால், இதற்­கான வட்டி, 25 சத­வீ­தம் வரை அதி­க­மாகி, செலவு கூடி­விடு­கிறது. இந்த இடை­வெ­ளியை சரி­செய்ய, வங்­கி­க­ளின் உதவி, தேவைப்­ப­டு­கிறது. மேலும், சகாய விலை வீடு­கள் குறித்து, அனைத்து துறை­யி­ன­ருக்­கும், பொது­வான வரை­ய­றையை ஏற்­ப­டுத்த வேண்­டும். மேலும், வீட்­டுக் கட­னுக்­கான, வரு­மான வரிச் சலு­கை­யி­லும் மாற்றம் செய்ய வேண்­டும். வீட்­டுக்­க­ட­னுக்­கான அசல் மற்­றும் வட்டி ஆகிய இரண்­டுக்­குமே, வரு­மான வரிச்­ச­லுகை வழங்­கப்­பட வேண்­டும். இவ்­வாறு, ‘கிரெ­டாய்’ தெரி­வித்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement