Advertisement

சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்

Share

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவை சந்தித்துள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 175 புள்ளிகளும், நிப்டி 50 புள்ளிகளும் சரிவை சந்தித்த நிலையில் காலை 11.15மணியளவில் சென்செக்ஸ் 206.10 புள்ளிகள் சரிந்து 39,246.97ஆகவும், நிப்டி 71.80 புள்ளிகள் சரிந்து 11,751.10ஆகவும் வர்த்தகமாகின.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற - இறக்கமான சூழல், முன்னணி நிறுவன பங்குகள் சரிவை சந்தித்ததன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் சரிவுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு சரிவு

அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் சரிந்து ரூ.69.89ஆக வர்த்தகமானது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement