Advertisement

‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம் அமெரிக்காவில் முதல் ஆலை

சென்னை: டி.வி.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த, ‘சுந்தரம் கிளேட்டன்’ நிறுவனம், அமெரிக்காவில் புதிய ஆலை ஒன்றை துவங்கியுள்ளது.சுந்தரம் கிளேட்டன் நிறுவனம், வெளிநாட்டில் அமைத்துள்ள முதல் ஆலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து, இந்நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனர், லட்சுமி வேணு கூறியுள்ளதாவது: அமெரிக்காவில், தெற்கு கரோலினாவில் உள்ள ரிட்ஜ்வில்லி தொழில் பூங்காவில், 50 ஏக்கர் பரப்பளவில், நிறுவனத்தின் புதிய வார்ப்பட ஆலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை, 630 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில், முதல் ஆண்டில், 1,000 டன் வார்ப்பட பாகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. அடுத்த ஐந்தாண்டுகளில் இதுவே, 10 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்படும்.இரு சக்கர வாகனங்கள் துவங்கி, கனரக வாகனங்கள் வரை, அனைத்து வகையான வாகனங்களுக்கும் தேவைப்படும் உதிரி பாகங்கள் இங்கு தயாரிக்கப்பட்டு, உலகளவிலான பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.குறிப்பாக இதன் மூலம், அமெரிக்காவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறப்பான சேவையை வழங்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா

    vazhthukkal ammani

  • Muruga - chennai,இந்தியா

    வாழ்த்துக்கள் திருமதி லட்சுமி வேணு ........

  • S.kausalya - Chennai,இந்தியா

    என்னுடைய ஆசிகள் இந்த பெண்ணிற்கு.. நம் ஊரில் இவர் இருந்தால் எப்படி இருக்கும். பாப்பாத்தி என இழிவு பேசி யாருடனாவது இணைத்து அசிங்க படுத்தி அவரை மேலெழும்பி விடாமல் செய்திருப்பார்கள் . Tvs நிறுவனரை கேவலமாக பேசி கொண்டே அந்த நிறுவனத்தில் வேலை பார்போர் உண்டு. நல்லவேளை இவர் வெளி நாடு சென்றார்.

  • Ayappan - chennai,இந்தியா

    இந்திய பாரம்பரியத்தில் வளர்ந்த ஒரு நல்ல கம்பெனி ... வாழ்த்துக்கள்

  • Manian - Chennai,இந்தியா

    இவர் தந்தையார் டெக்ஸாஸ் டெக்சர்ஸ் கிறிஸ்ட்டியான் கழகத்தில் எம்.பி.ஏ படித்ததால் இந்த சிறந்த எண்ணம் வந்துள்ளது. தற்குறி திருடர்கள் கழக தொழில் அதிபர்களுக்கு இது வரவே வராது. கொள்ளு தாத்தா டே.வ.சுந்தரம் ஆயங்காரென் பெயரே மேலே தூக்கி செல்வார் லட்சுமே. (எந்த வித தொடர்பு இவர்களிடம் எனக்கில்லை, சொந்தமும் இல்லை).

    • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

      நன்றி மணியன் .....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement