Advertisement

லாபமற்ற திட்டங்கள் கைவிடும் அரசு கேபிள்

லாபம் இல்­லாத, ‘இ – சேவை’ மையங்­கள், ‘இல்­லம் தோறும் இணை­யம்’ போன்ற திட்­டங்­களை கைவி­டும் எண்­ணத்­தில், அரசு கேபிள், ‘டிவி’ நிறு­வ­னம் உள்­ளது.

இது குறித்து அரசு கேபிள், ‘டிவி’ அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: அரசு, இ – சேவை மையங்­களில், தாலுகா அள­வில் செயல்­படும் மையங்­கள் மட்­டுமே லாபத்­தில் இயங்­கு­கின்றன. இதர மையங்­கள் அனைத்­தும், அதற்­கான செலவை சரி கட்­டும் அள­விற்கு கூட வரு­வாய் ஈட்­டு­வ­தில்லை. இத­னால், மாந­க­ராட்சி, நக­ராட்சி அலு­வ­ல­கங்­களில் செயல்­படும் சேவை மையங்­களை, அந்­தந்த நக­ராட்­சி­க­ளி­டமே ஒப்­ப­டைக்க, ஆலோ­சனை நடத்தி வரு­கி­றோம்.

இதே போன்று, இல்­லம் தோறும் இணை­யம் திட்­டத்­திற்­கும், மக்­க­ளி­டம் பெரிய வர­வேற்பு இல்லை. தற்­போது மொபைல் போனில் அனைத்து சேவை­க­ளை­யும் மக்­கள் பெற்று விடு­கின்­ற­னர். இத்­து­டன், மாந­க­ராட்சி பேருந்து நிலை­யங்­களில், இல­வச, வை – பை சேவை வழங்­கும் திட்­ட­மும் வெற்­றி­ய­டை­ய­வில்லை. இத­னால், அரசு கேபிள், ‘டிவி’யை மட்­டும், சிறப்­பான முறை­யில் நடத்த ஆலோ­சனை நடந்து வரு­கிறது. இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

– நமது நிரு­பர் –

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement