Advertisement

மாருதி சுசூகி நிறுவனத்தின் நிகர லாபம் சரிவு

புதுடில்லி: மாருதி சுசூகி இந்­தியா நிறு­வ­னத்­தின் நிகர லாபம், கடந்த, 2018 – 19ம் நிதி­யாண்­டின், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், 4.6 சத­வீ­தம் குறைந்து, 1,796 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது. இது, 2017- – 18ம் நிதி­யாண்­டின், இதே காலாண்­டில், 1,882 கோடி ரூபா­யாக இருந்­தது.

கடந்த நிதி­யாண்­டில், இந்­நி­று­வ­னத்­தின் நிகர லாபம், 7,500 கோடி ரூபா­யாக உள்­ளது. இது, முந்­தைய நிதி­யாண்டு ஈட்­டி­யதை விட, 2.9 சத­வீ­தம் குறைவு. அதே­ச­ம­யம், இதே காலத்­தில், நிகர விற்­பனை, 6.3 சத­வீ­தம் உயர்ந்து, 83 ஆயி­ரத்து 26 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இதே காலத்­தில், நிறு­வ­னத்­தின் வாகன விற்­பனை, 4.7 சத­வீ­தம் உயர்ந்து, 18 லட்­சத்து 62 ஆயி­ரத்து 449 ஆக உயர்ந்­துள்­ளது. இதில், 1 லட்­சத்து 8 ஆயி­ரத்து 749 வாக­னங்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டு உள்ளன.

அன்­னி­யச் செலா­வணி மாற்­றம், மூலப் பொருட்­கள் விலை உயர்வு, விளம்­ப­ரச் செலவு அதி­க­ரிப்பு போன்­ற­வற்­றால், நிகர லாபம் குறைந்­துள்­ள­தாக, மாருதி சுசூகி இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement