Advertisement

மூடப்பட்டது, ‘ஜெட் ஏர்வேஸ்’

புதுடில்லி: வங்­கி­கள், அவ­சர நிதி­யு­தவி வழங்க மறுத்து விட்­ட­தால், ‘ஜெட் ஏர்­வேஸ்’ விமான சேவை நேற்றுடன் தற்காலிகமாக முடி­வுக்கு வந்­து­விட்­ட­து.

இந்­நி­று­வ­னம், 8,000 கோடி ரூபாய் கட­னில் சிக்­கி­யுள்­ளது. இதை­ய­டுத்து, வங்­கி­கள் கூட்­ட­மைப்­பின் யோச­னைப்­படி, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னர், நரேஷ் கோயல், தன் பங்கு மூல­த­னத்தை குறைத்­துக் கொண்­டார். இயக்­கு­னர் குழு­வில் மாற்­றம் செய்து, 75 சத­வீத பங்­கு­களை விற்க, வங்­கி­கள் கூட்­ட­மைப்பு முயற்­சித்­தது. அது பல­ன­ளிக்­க வில்லை. அத­னால், இக்­கூட்­ட­மைப்­பால் உறுதி அளித்­த­படி, ஜெட் ஏர்­வேஸ் நிறு­வ­னத்­தில், 1,500 கோடி ரூபாய் முத­லீடு செய்ய முடி­ய­வில்லை.

இந்­நி­லை­யில், குத்­த­கைக்கு விமா­னங்­களை அளித்த நிறு­வ­னங்­கள், பெரும்­பா­லான விமா­னங்­களை திரும்­பப் பெற்­றுக் கொண்­டன. அத­னால், 2018, டிசம்­ப­ரில், 123 ஆக இருந்த விமா­னங்­க­ளின் எண்­ணிக்கை, தற்­போது, ஐந்­தாக குறைந்து விட்­டது. உட­ன­டி­யாக, 400 கோடி ரூபாய் நிதி­யு­தவி அளித்­தால், சேவையை தொட­ர­லாம் என, ஜெட் ஏர்­வேஸ் தெரி­வித்­தது. ஆனால், மேற்­கொண்டு நிதி­யு­தவி அளிக்க, வங்­கி­கள் மறுத்து விட்­டன. இத­னால், ஜெட் ஏர்­வேஸ் விமான சேவை, தற்­கா­லி­க­மாக முடி­வுக்கு வந்­தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement