Advertisement

‘ஆர்காம்’ பங்கு விற்பனை ஆய்வு செய்கிறது, ‘செபி’

புதுடில்லி:அனில் அம்­பானி குழு­மத்­தின், நான்கு நிறு­வ­னங்­களின் பங்கு விற்­ப­னை­யில் விதி­மீ­றல் நடை­பெற்­றுள்­ளதா என்­பது குறித்து, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான, ‘செபி’ விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ளது.
கடந்த வாரம், ‘ஆர்­காம்’ எனப்­படும், ரிலை­யன்ஸ் கம்­யூ­னி­கே­ஷன்ஸ், ரிலை­யன்ஸ் இன்ப்­ராஸ்ட்­ரக்­சர், ரிலை­யன்ஸ் பவர், ரிலை­யன்ஸ் கேப்­பி­டல் ஆகிய நான்கு நிறு­வ­னங்­களின் பங்கு விலை, தொடர்ந்து நான்கு நாட்­கள் கடு­மை­யான வீழ்ச்­சியை கண்­டன.இதை­ய­டுத்து, ரிலை­யன்ஸ் குழும நிறு­வ­னங்­களின் சந்தை மூல­த­னம், 13ஆயி­ரம் கோடி ரூபாய் வரை சரி­வ­டைந்­தது.
இதற்கு, அப்­பங்­கு­களை அட­மானம் வைத்­தி­ருந்த, ‘எல் அண்டு டி’ மற்­றும் எடல்­வைஸ் குழு­மங்­கள் மேற்­கொண்ட அதி­ரடி விற்­பனை தான் கார­ணம் என, ரிலை­யன்ஸ் குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.
இது தொடர்­பாக, விசா­ரணை நடத்த வேண்­டும் என, பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள், செபி­யி­டம் வலி­யு­றுத்­தி­யுள்ளன. இதை­ய­டுத்து, பங்கு விற்­ப­னை­யில், விதி­மீ­றல் நடை­பெற்­றுள்­ளதா என்­பது குறித்து, செபி விசா­ர­ணையை துவக்­கி­யுள்­ளது. இத­னி­டையே, எல் அண்டு டி., மற்­றும் எடல்­வைஸ் குழு­மங்­கள், ரிலை­யன்ஸ் குற்­றச்­சாட்டை மறுத்­துள்ளன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement