Advertisement

பங்குச் சந்தை

தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்டு எண் நிப்டி, கடந்த வாரம் உயர்ந்து வர்த்­த­கம் ஆனது. இருப்­பி­னும், வார இறுதி நாட்­க­ளான, வியா­ழன், வெள்ளி ஆகிய நாட்­களில், சர்­வ­தேச சந்­தை­யில் ஏற்­பட்ட சரிவு, நம் சந்­தை­யி­லும் பிர­தி­ப­லித்­தது. இதை­ய­டுத்து, இந்த இரு தினங்­களில், 150 புள்­ளி­கள் சரிந்­தது.

ஐரோப்­பிய யூனி­யன், அத­ன் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்­பாண்­டில் எதிர்­பார்ப்பை விட குறை­வாக இருக்­கும் என, கடந்த வியா­ழன் அன்று அறி­வித்­தது.ஜன­வரி மாத இறு­தி­யில், சீனா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே நடந்து வரும் வர்த்­தக மோதல் குறித்து, இந்த இரு நாடு­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­களும் பேச்சு நடத்­தி­னர். ஆனால், அதி­கா­ரி­கள் பேச்­சில் சுமுக நிலை எட்­டப்­ப­ட­வில்லை.

அமெ­ரிக்க அரசு கரு­வூ­லம், தொடர்ந்து நான்­கா­வது நாளாக, வியா­ழன் அன்று, 2.6 சத­வீ­தம் சரிந்­தது.அனில் அம்­பா­னி­யின், ரிலை­யன்ஸ் நிறு­வன பங்­கு­கள், கடந்த வாரம் அதி­கப்­ப­டி­யான சரிவை சந்­தித்­தது.இவை­யெல்­லாம் வார இறு­தி­யில் நம் சந்­தையை பாதித்­தன.

வெள்­ளி­யன்று சந்­தை­கள், 1 சத­வீ­தத்­துக்­கும் மேல் சரிந்­தன. வாகன துறை­யைச் சேர்ந்த, ‘டாடா மோட்­டார்ஸ்’ மூன்­றா­வது காலாண்­டில், நிறு­வ­னத்­தின் வர­லாற்­றில் இல்­லாத அள­வுக்கு, அதிக நஷ்­டத்தை சந்­தித்­தது. இத­னால், அதன் பங்­கு­கள் சந்­தை­யில் கடும் வீழ்ச்சி கண்­டன.

டால­ருக்கு நிக­ரான இந்­திய ரூபா­யின் மதிப்பு, 13 சத­வீ­தம் குறைந்­துள்­ளது. ஆசிய நாண­யங்­களில் அதி­கப்­ப­டி­யான மதிப்பு சரிந்­தது, இந்­திய ரூபாய் ஆகும். பிற நாடு­க­ளின் நாண­யத்­தின் மதிப்பு, குறைந்த அள­வி­லேயே சரிந்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.இந்த வாரத்தை பொறுத்­த­வரை, நிப்டி சப்­போர்ட், 10,905 மற்­றும் 10,690 புள்­ளி­கள் ஆகும். ரெசிஸ்­டென்ட், 10,835 ஆகும்.

முருகேஷ் குமார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement