Advertisement

கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்

கமாடிட்டி சந்தை கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை, இந்த ஆண்டு துவக்­கம் முதலே உயர்ந்து வர்த்­த­க­மாகி வரு­கிறது. இருப்­பி­னும், இம்­மா­தம் முதல் வாரத்­தில், சற்று சரிந்து வர்த்­த­கம் ஆகி முடி­வுற்­றது.இந்த சரி­வுக்கு, பல்­வேறு கார­ணங்­களை சொல்­ல­லாம்:

உலக அள­வில் பொரு­ளா­தார வளர்ச்சி குறித்து எழும் சந்­தே­கங்­கள்கச்சா எண்­ணெ­யின் தேவை குறித்து எழும் கேள்­வி­கள்பங்­குச் சந்­தை­களில் தொட­ரும் சரிவுஅமெ­ரிக்க நாணய குறி­யீ­டான, டாலர் இண்­டெக்ஸ், கடந்த ஆறு மாதங்­களில் இல்­லாத அள­வுக்கு உயர்வு பெற்­றது

ஐரோப்­பிய நாண­யத்­தின் மதிப்பு சரிவுஇது போன்ற பல்­வேறு கார­ணங்­க­ளால், கடந்த வாரம், கச்சா எண்­ணெய், விலை சரிந்து வர்த்­த­கம் ஆனது.அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடை­யே­யான வர்த்­தக மோதல் குறித்து, கடந்த மாதம் இறு­தி­யில், இவ்­விரு நாடு­க­ளின் அதி­கா­ரி­க­ளுக்­கி­டையே பேச்சு நடை­பெற்­றது. ஆனால், எந்­த­வொரு சுமு­க­மான முடி­வும் எட்­டப்­ப­ட­வில்லை.

அடுத்­த­கட்­ட­மாக, மார்ச், 1ம் தேதி­யன்று, மீண்­டும் இரு நாடு­க­ளுக்கு இடையே பேச்சு நடை­பெற இருக்­கிறது. இந்த சந்­திப்பு குறித்து மிகப் பெரும் எதிர்­பார்ப்­பு­கள் எழுந்­துள்­ளன. இதில் ஏற்­படும் மாற்­றங்­கள், சந்­தை­யில் ஏற்­றத் தாழ்­வு­களை நிச்­ச­யம் ஏற்­ப­டுத்­தும்.ஒபெக் உறுப்பு நாடு­களில் ஒன்­றான சவுதி அரே­பியா, ஜன­வரி மாதத்­தில், தன் உற்­பத்­தியை, தின­சரி, 4 லட்­சம் பேரல் என, குறைத்து அறி­வித்­தி­ருந்­தது.

உற்­பத்தி குறைப்பு நில­வ­ரங்­களை மேற்­பார்வை செய்­யும் மேற்­பார்வை குழு­வின் கூட்­டம், வரும் ஏப்­ர­லில் நடை­பெற இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது கூட்­டத்தை மார்ச் மாதமே நடத்­து­வது என, ஒபெக் அமைப்பு முடிவு செய்­துள்­ளது.இது, சந்­தை­யில் பெரும் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் விளை­வாக, கடந்த வெள்­ளி­யன்று, கச்சா எண்­ணெய் விலை, 3 சத­வீ­தம் உயர்ந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.


வெனி­சுலா நாட்­டின் மீது, அமெ­ரிக்கா கொண்டு வந்­துள்ள பொரு­ளா­தா­ரத் தடை கார­ண­மாக, அந்­நாட்­டின் கச்சா எண்­ணெய் ஏற்­று­மதி, பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளது.வாரம் ஒரு முறை வெளி­வ­ரும், அமெ­ரிக்­கா­வின் எண்­ணெய் இருப்பு விப­ரம், கடந்த வாரம் வியா­ழன் அன்று வெளி­யா­னது. அதில், எதிர்­பார்த்­ததை விட அதிக அள­வி­லான இருப்பு உள்­ள­தாக விப­ரம் வெளி­யா­னது. இது, சந்­தை­யில் விலை சரி­வுக்கு கார­ண­மாக அமைந்­தது.

ஷெல் ஆயில் எனப்­படும், அமெ­ரிக்­கா­வின், கச்சா எண்­ணெய் உற்­பத்தி தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. தற்­போது, தின­சரி உற்­பத்­தி­யா­னது, 1 கோடியே, 20 லட்­சம் பேரல்­களை தாண்டி, வர­லாற்று உச்­சத்தை அடைந்து வரு­கிறது.

தங்கம் வெள்ளி

சர்­வ­தேச சந்­தை­யில் தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை, கடந்­தாண்டு நவம்­பர் மாதம் முதலே உயர்ந்து வந்­தது. இந்­நி­லை­யில், ஜன­வரி, பிப்­ர­வரி மாதங்­களில் அதி­கப்­ப­டி­யான உயர்வை சந்­தித்­தது குறிப்­பி­டத்தக்­கது.

உலக அள­வில், பங்­குச் சந்­தை­கள் தொடர்ந்து மூன்று நாட்­க­ளாக சரிந்து காணப்­பட்­டன. அமெ­ரிக்கா, சீனா ஆகிய நாடு­க­ளுக்கு இடையே, இறக்­கு­மதி வரி விதிப்பு சம்­பந்­த­மான பேச்சு, சுமுக நிலையை எட்­ட­வில்லை. இதை­ய­டுத்து, அசா­தா­ரண சூழல் தொட­ர­லாம் எனும் சஞ்­ச­லம் கார­ண­மாக, பங்­குச் சந்­தை­கள் சரிந்­தன.

பங்­குச் சந்­தை­க­ளின் இத்­த­கைய சரிவு கார­ண­மா­க­வும் தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை உயர்ந்து வரு­கிறது.அமெ­ரிக்­கா­வின் வட்டி விகி­தம் தொடர்ந்து உயர்த்­தப்­ப­ட­லாம் என்ற கண்­ணோட்­டம் இருந்து வந்­தது. இந்­நி­லை­யில், தற்­போது வெளி­வ­ரும் பொரு­ளா­தார கார­ணி­கள் அடிப்­ப­டை­யில், பொரு­ளா­தார வளர்ச்சி எதிர்­பார்த்த அளவு இருக்­காது என்ற சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

இத­னால், வட்டி விகித உயர்வு நீட்­டிக்­கப்­படும் என்ற கருத்­தால், அமெ­ரிக்க நாண­யத்­தின் மதிப்பு இறங்­கி­யது. இதன் கார­ண­மாக, தங்­கம், வெள்ளி ஆகி­ய­வற்­றின் விலை அதி­க­ரித்து வரு­கிறது.

மேலும் செல­வி­னங்­கள் தொடர்­பான சர்ச்­சை­யில், அமெ­ரிக்க பார்­லி­மென்ட் ஒரு மாதத்­திற்கும் மேலாக முடங்­கி­யி­ருந்­த­தும், சந்­தைக்கு சாத­க­மான சூழல் ஏற்­பட வழி­வ­குத்­தது.ஐரோப்­பிய பொரு­ளா­தா­ரம் எதிர்­பார்த்த அளவை விட வளர்ச்சி குறை­வாக இருந்­த­தால், யூரோ நாண­யத்­திற்கு எதி­ராக அமெ­ரிக்க டால­ரின் மதிப்பு, தற்­போது உயர்ந்து வரு­கிறது. இது, தங்­கம் விலை உயர்வை கட்­டுக்­குள் கொண்டு வரு­கிறது. இத­னால், கடந்த வாரம் தங்­கத்தின் விலை­யில் சிறி­த­ளவு தொய்வு ஏற்­பட்­டது.

கடந்த வியா­ழன் அன்று, ஐரோப்­பிய ஆணைக் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், நடப்பு மற்­றும் அடுத்த ஆண்­டிற்­கான பொரு­ளா­தார வளர்ச்­சியை குறைத்­துள்­ள­தாக கூறப்­பட்­டுள்­ளது. மேலும், எஸ்.பி.டி.ஆர்., எனப்­படும், தங்க, இ.டி.எப்., சேமிப்பு முறை­யில், கடந்த வாரம் தங்க இருப்பு விகி­தம், 1 சத­வீ­தம் அள­வுக்கு சரிந்­துள்­ள­தும் கவ­னிக்­கத்­தக்­கது.

தங்­கம் உற்­பத்­தியை பொறுத்­த­வரை, ஜி.எப்.எம்.எஸ்., நிறு­வ­னம் நடத்­திய உலக தங்க உற்­பத்தி கருத்­துக் கணிப்பு நில­வ­ரத்­தில், தொடர்ந்து சீனா முத­லி­டம் வகித்து வரு­கிறது.சீனா­வின் மொத்த தங்­கம் உற்­பத்தி, 426 டன் ஆகும். ஆஸ்­தி­ரே­லியா, 275 டன்­னு­டன் இரண்­டா­வது இடத்­தில் இருக்­கிறது. 270 டன்­னு­டன் ரஷ்யா மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது. உலக நாடு­க­ளின் மொத்த உற்­பத்­தி­யா­னது, 2017ல், 3,247 டன் ஆக இருந்­தது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டான, 2016ம் ஆண்­டு­டன் ஒப்­பி­டும் போது, 5 டன் குறை­வா­கும்.

செம்பு

செம்பு விலை, தொடர்ந்து ஐந்­தா­வது வார­மாக அதி­க­ரித்து, வர்த்­த­க­மாகி வரு­கிறது. சமீப கால­மாக, விலை­யில் முன்­னேற்­றம் காணப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­கது.

தென் அமெ­ரிக்க நாடான சிலி நாட்­டில் உள்ள மிகப் பெரிய செம்பு சுரங்­கத்­தில், கடந்த ஆண்­டில், உற்­பத்தி, 1.9 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது. இது­வும் தற்­போ­தைய விலை ஏற்­றத்­துக்கு சாத­க­மாக அமைந்­தது. கடந்த, 2018ம் ஆண்­டில் பெரிய அள­வில் விலை சரிவை சந்­தித்­தது செம்பு. அதற்கு முன், 2017ம் ஆண்­டில், 30 சத­வீ­தம் அள­வுக்கு விலை உயர்வு கண்­ட­தும் நினை­வு­கூ­ரத்­தக்­கது.

லண்­டன் பொருள் வாணிப சந்­தை­யில், செம்பு இருப்பு குறைந்து வரு­கிறது. தற்­போது, மொத்த இருப்பு, 87 ஆயி­ரத்து, 725 டன்­னாக உள்­ளது. இது, ஜன­வரி மாதத்­தில், 1 லட்­சத்து, 30 ஆயி­ரம் டன்­னாக இருந்­தது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement