Advertisement

தொழில் துறை உற்பத்தி 0.5 சதவீதமாக சரிவடைந்தது

புதுடில்லி:கடந்த ஆண்டு, நவம்­ப­ரில், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, 17 மாதங்­களில் இல்­லாத வகை­யில், 0.5 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது. இது, அக்­டோ­ப­ரில், 8.1 சத­வீ­தம்; மறு­ம­திப்­பீட்­டில், 8.4 சத­வீ­த­மாக இருந்­தது.


இந்த சரி­விற்கு, தயா­ரிப்பு, நுகர்­பொ­ருட்­கள், நுகர்­வோர் சாத­னங்­கள் துறை­களில் ஏற்­பட்ட தொய்­வு ­தான் முக்­கிய கார­ணம். கடந்த, 2017, நவம்­ப­ரில், தொழில் துறை உற்­பத்தி வளர்ச்சி, 8.5 சத­வீ­த­மாக காணப்­பட்­டது. இது, அதே ஆண்டு, ஜூனில், மைனஸ் 0.3 சத­வீ­த­மாக பின்­ன­டை­வைக் கண்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.


மதிப்­பீட்டு மாதத்­தில், தயா­ரிப்பு துறை உற்­பத்தி வளர்ச்சி, மைனஸ் 0.4 சத­வீ­த­மாக பின்­ன­டை­வைக் கண்­டுள்­ளது. இது, 2017, நவம்­ப­ரில், 10.4 சத­வீ­த­மாக உயர்ந்து இருந்­தது.இதே காலத்­தில், நுகர்­வோர் சாத­னங்­கள் துறை வளர்ச்சி, 3.1லிருந்து, 0.9 சத­வீ­த­மாக குறைந்­து உள்­ளது.


அதே­ச­ம­யம், சுரங்­கத்துறை வளர்ச்சி, 1.4 சத­வீ­தத்­தில் இருந்து, 2.7 சத­வீ­த­மாக உயர்ந்­து
உள்­ளது. மின்­ துறை உற்­பத்தி வளர்ச்சி, 3.9 சத­வீ­தத்­தில் இருந்து, 5.1 சத­வீ­த­மாக அதி­க­ரித்­து உள்­ளது என, மத்­திய புள்­ளி­யி­யல் அலு­வ­ல­கத்­தின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement