Advertisement

ரூ.10 ஆயி­ரம் வரை, ‘மாருதி’ விலை அதி­க­ரிப்பு

புது­டில்லி:‘மாருதி சுசூகி’ நிறு­வ­னம், அதன் தயா­ரிப்­பு­க­ளுக்கு, 10 ஆயி­ரம் ரூபாய் வரை விலையை அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­வித்து­உள்­ளது.


இது குறித்து, அந்­நி­று­வ­னம் தெரி­வித்­துஉள்­ள­தா­வது:பொருட்­களின் விலை உயர்வு, இந்­திய ரூபாய் மதிப்பு மாற்­றங்­கள் ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக, தவிர்க்க முடி­யா­மல் வாக­னங்­களின் விலையை, 10 ஆயி­ரம் ரூபாய் வரை அதி­க­ரிக்க வேண்­டி­ய­தாகி விட்­டது.


இந்த விலை­யேற்­றம், மாடல்­களை பொறுத்து வேறு­படும்.இந்த விலை உயர்வு, உட­ன­டி­யாக
அம­லுக்கு வரு­கிறது.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.டிசம்­பர் மாதத்­தி­லேயே, ஜன­வரி முதல் விலை­யேற்­றம் இருக்­கும் என, மாருதி சுசூகி தெரி­வித்­தி­ருந்­தது. இருப்­பி­னும், எவ்­வ­ளவு ரூபாய் அதி­க­ரிக்­கும் என்­பது குறித்து தெரி­விக்­கா­மல் இருந்­தது.


தற்­போது, பல கார்­க­ளுக்கு விலையை அதி­க­ரித்­தி­ருந்­தா­லும், அண்­மை­யில் அறி­மு­க­மான புதிய, ‘எர்­டிகா’ மாட­லுக்கு இந்த விலை உயர்வு இல்லை எனத் தெரி­கிறது.மாருதி சுசூகி நிறு­வ­னத்தை போலவே, ‘டொயொட்டா கிர்­லோஸ்­கர், இசுசூ மோட்­டார்ஸ்’ ஆகிய நிறு­வ­னங்­களும், ஜன­வரி முதல் விலை­யேற்­றப் போவ­தாக அறி­வித்­தி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement