Load Image
Advertisement

சரிவுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்

ADVERTISEMENT

மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று (ஜன.,10) சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 40.08 புள்ளிகள் சரிந்ஐ 36,172.83 புள்ளிகளாகவும், நிப்டி 8.30 புள்ளிகள் சரிந்து 10,846.85 புள்ளிகளாகவும் உள்ளன.


இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்சிஎல் டெக், கோடாக் வங்கி, எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், ஆசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவன பங்குகள் 1.30 சதவீதம் சரிவடைந்துள்ளன. அதே சமயம் டாடா மோட்டார்ஸ், யெஸ் வங்கி, என்டிபிசி, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 0.96 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன. சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்பட்ட போதிலும், இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனேயே வர்த்தகமாகி வருகின்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement