Advertisement

வெல்­கம் கிருஷ்­ண­மூர்த்தி சுப்­ர­ம­ணி­யன்!

புதிய தலை­மை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ராக கிருஷ்­ண­மூர்த்தி சுப்­ர­ம­ணி­யன் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இவர் முன் உள்ள சவால்­கள் என்­னென்ன? அவற்றை எப்­படி எதிர்­கொள்ள வேண்­டும்?

முன்­னாள் தலை­மை பொரு­ளா­தார ஆலோ­ச­க­ரான அர­விந்த் சுப்­ர­ம­ணி­யன், சொந்­தக் கார­ணங்­க­ளைச் சொல்லி, தன் பத­வியை ராஜி­னாமா செய்­தார். ஏப்­ரல் 2019 உடன், பா.ஜ.,வின் பத­விக்­கா­லம் முடிவு பெற­வி­ருப்­ப­தால், புதிய பொரு­ளா­தார ஆலோ­ச­கரை, இந்த அரசு நிய­மிக்­காது என்றே கரு­தப்­பட்­டது.ஆனால், இளம் பொரு­ளா­தார வல்­லு­ன­ரான கிருஷ்­ண­மூர்த்தி சுப்­ர­ம­ணி­யன், தற்­போது மூன்­றாண்டு காலத்­துக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.


இதில் இருந்து ஒரு விஷ­யம் தெளிவு. இந்த அரசு, முறை­யான பொரு­ளா­தார தேர்ச்­சி­யுள்ள ஒரு­வரை தமது ஆலோ­ச­க­ராக, பக்­கத்­தில் வைத்­துக்­கொள்ள விரும்­பு­கிறது. அப்­ப­டி­யா­னால், கிருஷ்­ண­மூர்த்தி சுப்­ர­ம­ணி­ய­னுக்கு, அரசு தரப்­பில் இருந்து ஏரா­ள­மான எதிர்­பார்ப்­பு­கள் இருக்­கும் என்றே இதற்கு அர்த்­தம்.அந்த எதிர்­பார்ப்­பு­கள் என்­ன­வாக இருக்­கும் என்­பதை பார்ப்­ப­தற்கு முன், அவ­ரின் தேர்வை கொஞ்­சம் புரிந்து கொள்­வோம்.


இந்­திய தன்மை


விரால் ஆச்­சா­ரி­யா­வோடு இணைந்து, பல ஆய்­வுக் கட்­டு­ரை­களை எழு­தி­ய­வர் கிருஷ்­ண­மூர்த்தி சுப்­ர­ம­ணி­யன். இந்­திய, ஐ.ஐ.டி., – ஐ.ஐ.எம்., ஆகி­ய­வற்­றில் கல்வி கற்­ற­தோடு, அமெ­ரிக்கா சென்று, முனை­வர் பட்ட ஆய்வை செய்­த­வர்.ரகு­ராம் ராஜ­னது மாண­வர். பின் இந்­தி­யா­வுக்கே திரும்பி, ஆசி­ரி­யப் பணியை மேற்­கொண்­டி­ருக்­கி­றார். பல்­வேறு இந்­திய வங்­கி­களில், அமைப்­பு­களில் ஆலோ­ச­க­ராக இருந்­துள்­ளார்.இவை­யெல்­லாம் ஒரு செய்­தியை சொல்­கின்­றன. இவர், இந்­தி­யர்­க­ளின் நிலைமை அறிந்த, இந்­திய மன­தும், சிந்­த­னை­யும் உடை­ய­வர்.


முன்­னாள் தலை­மைப் பொரு­ளா­தார ஆலோ­ச­கர்­க­ளான ரகு­ராம் ராஜன், அர­விந்த் சுப்­ர­ம­ணி­யன் ஆகி­யோர் மீது வைக்­கப்­பட்ட ஒரு குற்­றச்­சாட்டு, அவர்­க­ளது அணு­கு­மு­றை­யில், ‘இந்­தி­யத் தன்மை’ இல்லை; அவர்­கள் மேலை­நாட்டு, ‘இறக்­கு­மதி’கள் என்­பது தான்.மேலை கல்­வி­யும், மேலை­நாட்டு பணி வாய்ப்­பு­களும் அவர்­களை முற்­றி­லும் இந்­திய யதார்த்­தங்­களை புரிந்­து­கொள்ள விடா­மல் செய்­து­விட்­டன என்­றும் சொல்­லப்­பட்­டது.


அந்த குறையை இவர் தீர்ப்­பார் என்றே கரு­த­லாம். சர்­வ­தேச அள­வில் இன்­றைய பொரு­ளா­தார மாற்­றங்­களை உணர்ந்த மேலை கல்­வி­யும், அதே­ச­ம­யம் இந்­திய பணி அனு­ப­வ­மும் இவ­ருக்கு அணி­க­லன்­கள்.


ஆர்.பி.ஐ.,யோடு உறவுபொது­வாக, ஆர்.பி.ஐ., கவர்­னர்­களும் தலை­மைப் பொரு­ளா­தார ஆலோ­ச­க­ரும் எதி­ரெ­திர் துரு­வங்­கள். அதா­வது, அரசு ஒன்றை செய்ய விரும்­பும் ஆர்.பி.ஐ., மாற்­றுக் கருத்து கொண்­டி­ருக்­கும். இந்த நிலைமை, தற்­போது மாறும் என்று எதிர்­பார்க்­க­லாம்.ஏனெ­னில், ஆர்.பி.ஐ.,யின் பல ஆலோ­ச­னைக் குழுக்­களில் சுப்­ர­ம­ணி­யன் ஓர் அங்­கம். ஒரு கட்­டத்­தில், ஆர்.பி.ஐ.,யின் நிதி கொள்­கைக் குழு­வில் நிய­மிப்­ப­தற்­காக, இவ­ரது பெயர் பரி­சீ­ல­னை­யில் இருந்­த­தா­கத் தெரி­கிறது.


விரால் ஆச்­சா­ரியா இவ­ரது நண்­பர். அத­னால், ஆர்.பி.ஐ.,க்கு, இவர் ஒன்­றும் புதி­ய­வ­ரல்ல. சொல்­லப் போனால், இந்­திய மண்­ணில் விளைந்த உள்­நாட்­டுத் தங்­கம். அத­னால், இரு அமைப்­பு­க­ளுக்­கும் இடையே தற்­போது நில­வும் கருத்து வேறு­பா­டு­கள் படிப்­ப­டி­யாக குறை­வ­தற்­கான வாய்ப்பு அதி­கம்.


மேஜிக் பட்­ஜெட்இரண்டு பெரிய வேலை­களை கிருஷ்­ண­மூர்த்தி சுப்­ர­ம­ணி­யன் செய்ய வேண்­டும். அடுத்த ஆண்டு லோக்­சபா தேர்­தல். அதற்கு முன், இடைக்­கால பட்­ஜெட் தாக்­கல் செய்­யப்­பட வேண்­டும். அதற்­கான ஆலோ­ச­னை­க­ளை­யும் வழி­காட்­டு­தல்­க­ளை­யும் வழங்க வேண்­டிய பொறுப்பு இவ­ரு­டை­யது.


இன்­றைக்கு இருக்­கும் நிதிப் பற்­றாக்­குறை, பண­வீக்­கம், கடன் வளர்ச்சி சரிவு போன்ற பல்­வேறு கார­ணி­களை சீர்­துா­க்­கிப் பார்த்து, அர­சின் செயல் திட்­டங்­க­ளுக்கு ஆலோ­ச­னை­கள் வழங்க வேண்­டியது இவ­ரது பொறுப்பு.வரும், 2019 பட்­ஜெட், நிச்­ச­யம் ஒரு, ‘மேஜிக்’ பட்­ஜெட்­டாக இருந்­தாக வேண்­டும்; அதற்­கான முயற்­சி­களை ஆட்­சி­யா­ளர்­கள் செய்­வர்.


அதற்­குப் போது­மான கொள்கை ரீதி­யான அடித்­த­ளத்­தை­யும், நியா­யங்­க­ளை­யும், வழி­மு­றை­க­ளை­யும் உரு­வாக்க வேண்­டும்.இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தின் பல்­வேறு முகங்­களை அறிந்­த­வ­ரால் மட்­டுமே, இத்­த­கைய ஆலோ­ச­னை­களை அர­சுக்கு வழங்க முடி­யும்.


அனு­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில் அல்­லா­மல், வலு­வான பொரு­ளா­தார தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், இவ­ரது ஆலோ­ச­னை­கள் அமை­யு­மா­னால், அது பட்­ஜெட்டை சட்­டென்று வேறு ஒரு உய­ரத்­துக்­குக் கொண்டு போகும்; அதன் மூலம், மக்­களும் ஆட்­சி­யா­ளர்­களும் மகிழ்ச்சி அடை­வர்.


இரண்­டா­வது பெரிய வேலை, தேர்­தல் முடிந்து, புதிய ஆட்சி அமை­யும்­போது, சமர்ப்­பிக்க வேண்­டிய, 2019- – 20க்கான பொரு­ளா­தார ஆய்­வு அறிக்கை.அடுத்த ஐந்­தாண்­டு­க­ளுக்­கான கொள்கை வழி­காட்­டு­த­லாக அந்த அறிக்கை அமை­யும் என்­ப­தால், தொலை­நோக்கு பார்­வை­யோ­டும், சர்­வ­தேச நில­வ­ரங்­களை கணித்­தும் வகுக்­கப்­பட வேண்­டி­ய திட்­டம் அது. சரி­யா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், இந்­தி­யா­வின், ‘பொரு­ளா­தார தலை­யெ­ழுத்து’ மடிக்­க­ணினி மேல் உட்­கா­ரும் இவ­ரது விரல் நுனி­யில் தான் இருக்­கிறது.


விமர்­ச­னங்­கள்


பண மதிப்­பி­ழப்பு நட­வ­டிக்­கையை ஆத­ரித்­தார். அத­னால், இவர் ஆளுங்­கட்­சி­யின் கைப்­பா­வை­யா­கவே திகழ்­வார் என்­றொரு விமர்­ச­னம் எழுந்­துள்­ளது. அதே­ச­ம­யம், பொதுத்­துறை வங்­கி­க­ளின் இணைப்­பால், வங்­கித்­துறை வளர்ச்சி அடை­யாது என்று எதிர் கருத்தை இவர் முன்­வைத்­தது, எவர் கண்­ணில் பட­மாட்­டேன் என்­கிறது.


அர­சின் கருத்­து­க­ளுக்கு பின்­பாட்டு பாடா­மல், தர­வு­க­ளின் அடிப்­ப­டை­யில், அனு­ப­வத்­தின் தராசு கொண்டு, சர்­வ­தேச நிலை­மை­களை அனு­ச­ரித்து, கோடா­னு­கோடி மக்­க­ளின் எதிர்­கா­லத்தை மன­தில் கொண்டே, பொரு­ளா­தார ஆலோ­ச­கர்­கள் தம் பரிந்­து­ரை­களை அர­சுக்கு வழங்­கு­வர். அதை ஏற்­ப­தும், ஏற்­கா­த­தும் அர­சின் பாடு. ஆனால், அர­சின் மன­சாட்­சி­யா­கத் திக­ழ­வேண்­டி­யது அவ­சி­யம். இவர் அர­சுக்­குத் தான் பொரு­ளா­தார ஆலோ­ச­கர், ஆளுங்­கட்­சிக்கு அல்ல. இவ­ரது கவ­னம் இந்­தி­யப் பொரு­ளா­தா­ரத்­தின் மீதே இருக்­கும்.


இவ­ருக்கு முன் இருந்த பொரு­ளா­தார ஆலோ­ச­கர்­கள் எத்­த­கைய சுயேச்சை தன்­மை­யோடு செயல்­பட்­ட­னரோ, அதே தான் இவ­ரது பாதை­யா­க­வும் இருக்­கும். இதைத் தான் நாடும் மக்­களும் விரும்­பு­கின்­ற­னர். வெல்­கம் கிருஷ்­ண­மூர்த்தி சுப்­ர­ம­ணி­யன்!


ஆர்.வெங்­க­டேஷ் பத்­தி­ரி­கை­யா­ளர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Suri - Chennai,இந்தியா

    வரவேற்கிறேன். ஆனால் இவரும் கைபொம்மை ஆகிவிடாமல் பணமதிப்பிழக்கம் போன்ற முட்டாள்தனமான வேறு முடிவுகள் எடுக்க விடாமல் அரசை வழி நடத்தவும் ஆலோசனை வழங்கினால் நன்மை பயக்கும். வலது சாரி சிந்தனைக்கு துணை போகாமல் நாட்டின் சார்பற்ற நடுநிலை அமைப்புகளின் மாண்பை கட்டி காக்க ஆலோசனை கூற வேண்டும். NITI ஆயோக் போன்ற அமைப்புகளின் ஆளுமையை அதற்குரிய இடத்தில் நிலை பெற வைக்க வேண்டும். முழுவதும் technical ஆன விவகாரங்களை SME கொண்டு தீர்மானிக்க வேண்டுமே தவிர அரசியல் சார்பு உள்ளவர்களை வைத்து முடிவு எடுக்க விடக்கூடாது. பதவியில் உள்ளவரை அரசு உகந்த முடிவு எடுக்காவிடின் தன் நிலையை , எதிர்ப்பை பூரணமாக பதிவு செய்து அந்த உசிதமற்ற முடிவின் பாதங்களை அரசிற்கு முழுமையாக புரிய வைக்க வேண்டும். பதவியில் இருந்து வெளியேறிய பின் அதை குறை கூறும் போக்கினை கைவிட வேண்டும். ஆலோசகர் பதவி என்பது பதவியில் இருக்கும் போதே தன் கருத்தை வலியுறுத்தி அரசின் தவறான போக்கை கட்டுப்படுத்த வேண்டுமே தவிர , துணை சென்று பின்னர் அதை critique செய்வது நல்ல ஆளுமைக்கு அழகல்ல. இவரடூய பணமதிப்பிழக்க நடவடிக்கைக்கு ஆதரவான கருத்து எந்த சமயத்தில் எடுத்தார் என்பது குறித்து சரியான பதிவில். அனைவரும் போல் அந்த முடிவு எடுத்த உடனே அந்த கருத்தை வெளியிட்டு, அந்த நடவடிக்கை ஏற்படுத்திய ஆறா பொருளாதார வடுக்களை கண்ட பின்னும் அதே கருத்தில் நிலை கொண்டிருந்தால் அது சரியல்ல.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement