Advertisement

36,000 புள்ளிகளை கடந்து சென்செக்ஸ் புதிய சாதனை

மும்பை : சர்தேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வின் எதிரொலிய இந்திய பங்குச்சந்தைகள் இன்று அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சென்செக்ஸ் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 36,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. நிப்டி பிப்ரவரி மாதத்திற்கு பிறகு தற்போது மீண்டும் 11,000 புள்ளிகளை கடந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூலை 12,காலை 9.15 நிலவரம்) சென்செக்ஸ் 187.13 புள்ளிகள் உயர்ந்து 36,453.06 புள்ளிகளாகவும், நிப்டி 65.40 உயர்ந்து 11,013.70 புள்ளிகளாகவும் உள்ளன. அனைத்து துறை பங்குகளும் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. குறிப்பாக பொதுத்துறை வங்கிகள், மின்துறை மற்றும் உலோகத்துறை பங்குகள் உச்சபட்ச ஏற்றம் கண்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement