Advertisement

டி.சி.என்.எஸ்., கிளாத்திங் பங்கு விலை நிர்ணயம்

புதுடில்லி:பெண்­க­ளுக்­கான ஆயத்த ஆடை­கள் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, டி.சி.என்.எஸ்., கிளாத்­திங், புதிய பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்­கு­கிறது. இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு, வரும், 18ல் துவங்கி, 20ல் முடி­வ­டை­கிறது.

பங்கு ஒன்­றின் குறைந்­த­பட்ச விலை, 714 ரூபாய்; அதி­க­பட்ச விலை, 716 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.மொத்­தம், 1.57 கோடி பங்­கு­களை விற்­பனை செய்து, 1,125 கோடி ரூபாய் திரட்ட, டி.சி.என்.எஸ்., கிளாத்­திங் திட்­ட­மிட்­டுள்­ளது.இப்­பங்கு வெளி­யீட்டை நிர்­வ­கிக்­கும் பொறுப்பை, ‘கோட்­டக் மகிந்­திரா கேப்­பி­டல் கம்­பெனி, சிட்டி குரூப் குளோ­பல் மார்­கெட்ஸ் இந்­தியா’ ஆகிய நிறு­வ­னங்­கள் ஏற்­றுள்­ளன.

டி.சி.என்.எஸ்., கிளாத்­திங் நிறு­வ­னம், ‘டபிள்யு, ஆரெ­லியா, விஷ்­புல்’ என்ற பிராண்­டு­களில், பெண்­க­ளுக்­கான ஆயத்த ஆடை­களை தயா­ரித்து, விற்­பனை செய்­கிறது. இந்­நி­று­வ­னத்­திற்கு, உள்­நாடு மற்­றும் வெளி­நா­டு­களில், 400 பிரத்­யேக கடை­கள்; 1,300 பெரிய அங்­கா­டி­கள் மற்­றும் 1,300 பன்­முக பிராண்டு விற்­பனை மையங்­கள் உள்­ளன.இந்­நி­று­வ­னம், ஆண்­கள் மற்­றும் குழந்­தை­க­ளுக்­கான ஆயத்த ஆடை­க­ளை­யும் தயா­ரிக்­கிறது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement