Advertisement

ஜூன் மாதத்தில் வாகன விற்பனை

புது­டில்லி:கடந்த ஜூன் மாதத்­தில், பய­ணி­யர் வாகன விற்­பனை, 38 சத­வீ­த­மும், கார்­களின் விற்­பனை, 34 சத­வீ­த­மும் உயர்ந்­துள்­ள­தாக, ’சியாம்’ எனும், இந்­திய மோட்­டார் வாகன தயா­ரிப்­பா­ளர்­கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, சியாம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது:உள்­நாட்டு பய­ணி­யர் வாகன விற்­பனை, ஜூன் மாதத்­தில், 37.54 சத­வீ­தம் அள­வுக்கு உயர்ந்­துள்­ளது. இம்­மா­தத்­தில், 2,73,759 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில், 1,99,036 பய­ணி­யர் வாக­னங்­கள் விற்­பனை ஆகின.
உள்­நாட்­டில் கார் விற்­பனை, 34.21 சத­வீ­தம் அள­வுக்கு உயர்ந்து, 1,83,885 கார்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு ஜூன் மாதத்­தில், 1,37,012 கார்­கள் விற்­பனை ஆகின.ஜூன் மாதத்­தில் மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 24.32 சத­வீ­தம் அதி­க­ரித்து, 11,99,332 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. கடந்த ஆண்டு இதே கால­கட்­டத்­தில், 9.64,729 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.
மொத்த இரு­சக்­கர வாக­னங்­களின் விற்­பனை, ஜூன் மாதத்­தில், 22.28 சத­வீ­தம் அதி­க­ரித்து 18,67,884 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன. கடந்த ஆண்டு இதே கால­கட்­டத்­தில் 15,27,509 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.வர்த்­தக வாக­னங்­க­ளைப் பொறுத்­த­வரை, மதிப்­பீட்டு மாதத்­தில், 41.72 சத­வீ­தம் அதி­க­ரித்து, 80,624 வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.இவ்­வாறு சியாம் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement