Advertisement

கோல்டு ஈ.டி.எப்., திட்டத்தில் வெளியேறியது ரூ.146 கோடி

புதுடில்லி:கடந்த ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்­டில், 14 கோல்டு ஈ.டி.எப்., திட்­டங்­களில் இருந்து, 146 கோடி ரூபாய் அள­விற்கு, முத­லீடு வெளி­யே­றி­யுள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்­தில், 218 கோடி ரூபா­யாக இருந்­தது.
இதே காலத்­தில், இத்­திட்­டங்­களின் கீழ் நிர்­வ­கிக்­கப்­படும் சொத்து மதிப்பு, 5,174 கோடி ரூபா­யில் இருந்து, 4,567 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.
கடந்த ஐந்து நிதி­யாண்­டு­க­ளாக, கோல்டு ஈ.டி.எப்., திட்­டங்­களில் அதிக அள­வில் முத­லீ­டு­கள் வெளி­யேறி வரு­கின்றன.அதே­ச­ம­யம், பங்­குச் சந்தை, 2014 முதல் ஏற்­றம் கண்டு வரு­கிறது. அத­னால், கோல்டு, ஈ.டி.எப்., திட்­டங்­களில் இருந்து, முத­லீட்­டா­ளர்­கள் பங்­குச் சந்­தைக்­கும், பங்கு சார்ந்த மியூச்­சு­வல் பண்டு திட்­டங்­க­ளுக்­கும் மாறி வரு­கின்­ற­னர்.
கடந்த, 2013 மே மாதம், கோல்டுஇ ஈ.டி.எப்., திட்­டங்­களில், 5 கோடி ரூபாய் அள­விற்கே முத­லீடு குவிந்­தது. அதன் பின், 2016, அக்.,ல், அதி­க­பட்­ச­மாக, 20 கோடி ரூபாய் முத­லீடு ஈர்க்­கப்­பட்­டது.இது குறித்து, மார்­னிங் ஸ்டார் இன்­வெஸ்ட்­மென்ட் நிறு­வ­னத்­தின் இந்­திய ஆய்­வுப் பிரிவு இயக்­கு­னர் கஸ்­தப் பெலா­புர்­கர் கூறி­ய­தா­வது:
கடந்த, 2005 முதல், தங்­கம் விலை உயர்ந்து வந்­தது. 2011 -– 12ல், தங்­கம் புதிய உச்­சத்தை எட்­டி­யது. அதன் பின், சரி­வ­டைய துவங்­கி­யது.அது முதல், ஒரு அவுன்ஸ் தங்­கம், 1,100 – 1,400 டாலர் என்ற விலைக்­குள் ஏற்ற, இறக்­க­மாக உள்­ளது. சர்­வ­தேச நில­வ­ரப்­படி, தங்­கம் விலை முடிவு செய்­யப்­ப­டு­கிறது.பங்­கு­கள் மீதான முத­லீ­டு­களில் அதிக வரு­வாய் கிடைப்­ப­தால், கோல்டு, ஈ.டி.எப்., திட்­டங்­களில் இருந்து முத­லீ­டு­கள் வெளி­யே­று­வது அதி­க­ரித்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறி­னார்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement