Advertisement

டி.சி.எஸ்., நிகர லாபம் ரூ.7,340 கோடி

பெங்களூரு:டாடா கன்­சல்­டன்சி நிறு­வ­னத்­தின் நிகர லாபம், நடப்பு, 2018- – 19ம் நிதி­யாண்­டின், ஏப்­ரல் – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்­டில், 6.3 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7,340 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
இது, கடந்த நிதி­யாண்­டின் ஜன­வரி – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், 6,904 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்­தில், நிறு­வ­னத்­தின் வரு­வாய், 6.8 சத­வீ­தம் உயர்ந்து, 32,075 கோடி­யில் இருந்து, 34,261 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.ஊதிய உயர்வு, விசா கட்­ட­ணம் அதி­க­ரிப்பு, பணி­யா­ளர் நிய­ம­னம் உள்­ளிட்­ட­வற்­றால், நிறு­வ­னத்­தின் நிகர லாபம் குறை­யும் என, சந்தை ஆய்­வா­ளர்­கள் மதிப்­பிட்­டி­ருந்­த­னர்.
இந்த இடர்ப்­பா­டு­களை, ரூபாய் மதிப்­பின் வீழ்ச்­சி­யால், நிறு­வ­னம் ஓர­ளவு சமா­ளித்­துள்­ளது.நேற்று, இந்­நி­று­வ­னத்­தின் காலாண்டு முடி­வு­கள் வெளி­வ­ரு­வதை முன்­னிட்டு, பங்கு விலை­யில் அதிக ஏற்ற, இறக்­கம் காணப்­பட்­டது.எனி­னும், மும்பை பங்­குச் சந்­தை­யில், வர்த்­த­கத்­தின் முடி­வில், பங்­கின் விலை, முன்­தி­னத்தை விட, 0.56 சத­வீ­தம் குறைந்து, 1,877 ரூபா­யில் நிலை பெற்­றது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement