Advertisement

ரிசர்வ் வங்கி அறிவிப்பு : சென்செக்ஸ் 200 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன.

ரிசர்வ் வங்கியின் நிதி நிலை ஆய்வுக்கூட்டம் தொடர்பாக இருதினங்களாக பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்தன. இன்றைய வர்த்தகமும் சரிவுடன் ஆரம்பமாகின. இன்று நடந்த கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. மாறாக வரும் காலங்களில் பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இதனால் வர்த்தகம் மேலும் சரிய தொடங்கின. குறிப்பாக வங்கி தொடர்பான பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.

வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 205.26 புள்ளிகள் சரிந்து 32,597.18-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 74.15 புள்ளிகள் சரிந்து 10,044.10-ஆகவும் முடிந்தன.

இன்றைய வர்த்தகத்தில் வங்கி தொடர்பான பங்குகள் 1.23 சதவீதம் சரிந்தன.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement