Load Image
Advertisement

ராகு, கேது பெயர்ச்சி பலன் கணித்த விதம்

ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது.
சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் இவர்களின் நிழல் சந்திக்கும் இடத்தை ராகு, கேது என அழைக்கிறோம். வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு இருப்பர். ராகு இருக்கும் ராசிக்கு நேர் எதிராக கேது இருப்பர். இவர்கள் இருவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பெயர்ச்சியாவர். தற்போது மேஷ ராசியில் இருக்கும் ராகு மீனத்திற்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது கன்னிக்கும் அக்.8, 2023 ஞாயிறு மதியம் 3:40 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். ஏப்.26, 2025 வரை இங்கு இருப்பர்.
பலன் கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த ராகு, கேது பெயர்ச்சியாவதற்குள் சனிபகவான் (டிச.20, 2023) குருபகவான்
(மே1, 2024) பெயர்ச்சியாக இருக்கின்றனர். இந்த மாற்றங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள், பரிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கான பொதுப்பலன்களை தந்துள்ளோம். இதில் சுமாரான பலன் இடம் பெற்றவர்களின் ஜாதகத்தில் நல்ல தசா, புத்தி நடப்பில் இருந்தால் பாதிப்பு குறையும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement