Load Image
Advertisement

பசுவை வலம் வந்தால் திருமணம்

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை. இவை முறையே பொன்னிறம், கருமை, வெண்மை, சாம்பல், சிவப்பு நிறம் கொண்டவை.
இவற்றின் சந்ததிகளே பூமியில் பசுக்களாக வாழ்கின்றன. பாற்கடலில் பிறந்ததால் இவை புனிதமானதாக கருதப்படுகின்றன.
அதிகாலையில் பசுவை கண்டால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். வெள்ளி காலை 6:00 - 7:00 மணிக்குள் சுக்ர ஹோரையில் பசுவை வலம் வர திருமணம் நடக்கும். அகத்திக்கீரை, பழம் கொடுத்தால் பாவம் தீரும். பசுவை வழிபடுவோர் கிருஷ்ணருடன் வாழும் பேறு பெறுவர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement