தொழுகை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்ற ஓர் இறை வணக்கமாகும். இதனால் மனிதனது வாழ்க்கைத் துாய்மை அடைகிறது. மனம் பலம் பெறுகிறது. உடல் ஆரோக்கியமாக இயங்குகிறது. தீயவற்றின் திசையில் திரும்பாமல் இருப்பதற்கும், பழுதான எண்ணங்களால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படவும் சிறந்ததோர் அரணாக இது அமையும். தொழுகையை நிலை நிறுத்துங்கள். அது உங்களை மானக்கேடானவற்றிலிருந்தும் தீமைகளை செய்வதில் இருந்தும் காப்பாற்றும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.