Load Image
Advertisement

இறுதி ஊர்வலம்

யூதர் ஒருவரின் இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்த நபிகள் நாயகம் எழுந்து நின்றார். தோழர்கள் இதைப் பார்த்ததும், “நமது கொள்கையை எதிர்க்கும் நபரின் உடல் எடுத்துச் செல்லப்படும்போது, நீங்கள் ஏன் எழுந்து நிற்க வேண்டும்” என கேட்டனர்.
அதற்கு அவர், ''எதிரியாக இருந்தாலும் அவர் மனிதராயிற்றே'' எனக் கூறினார்.
பார்த்தீர்களா... ஒருவர் மரணம் அடைந்தால் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பது அவசியம். அதோடு அவரது உடல் அடக்கம் செய்யும் வரை காத்திருக்க வேண்டும். இப்படி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவருக்கு ஒரு மடங்கு நன்மையும், அடக்கம் செய்யப்படும் வரை காத்திருப்பவருக்கு இரு மடங்கு நன்மையும் கிடைக்கும்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 
Advertisement