* வாழ்வாதாரம் விரிவாக வேண்டும் என்றால், உறவுகளை நல்ல முறையில் கவனியுங்கள்.
* இறைவனுக்குரிய கடமைகளை செய்வதோடு, உறவினருக்கான கடமைகளையும் செய்பவரே மனிதர்களில் சிறந்தவர்.
* முதலில் தாய், பின்னர் தந்தை, பிறகு உறவினருக்கு உதவுங்கள்.
* உறவினரான அண்டை வீட்டாருக்கு உறவினர் அல்லாத அண்டை வீட்டாரைவிட முன்னுரிமை உண்டு.
* இறைவன் உங்களுக்கு வழங்கியுள்ள செல்வத்தின் மூலம், மறுமையின் வீட்டைப்பெற அக்கறை கொள்ளுங்கள்.
* இம்மையில் நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை மறந்துவிடாதீர்கள்.
* பூமியில் அராஜகம் விளைவிக்க முயற்சி செய்யாதீர்கள்.
* இம்மையில் நீங்கள் செய்த நற்செயல்களுக்கு ஏற்பவே மறுமை வாழ்வு அமையும்.
* செல்வம் மனிதனுக்கு அலங்காரமாகவும் உள்ளது. அதேசமயம் சோதனையாகவும் உள்ளது.
- பொன்மொழிகள்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.