dinamalar telegram
Advertisement

என்கவுன்டரில் ரவுடி ஜான்சன் சுட்டுக் கொலை

Share
பெங்களூரு : பெங்களூரில் நடந்த என்கவுன்டரில் பிரபல ரவுடி, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ரவுடி ஜான்சன். பெங்களூரில், ஜான்சன் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது. தனது கும்பலுடன் அடிக்கடி பெங்களூரு வந்து, வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி விட்டு தலைமறைவாகி விடுவது ஜான்சனின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில், ரவுடி ஜான்சன் நேற்று பெங்களூருக்கு வந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. புறநகர் பகுதியான நாகவரா என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த ஜான்சனை, போலீசார் மடக்கினர். அப்போது, தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி ஜான்சன் சுட்டார். போலீசாரும் திருப்பிச் சுட்டனர். இதில், மார்பு மற்றும் தலையில் குண்டு பாய்ந்து ஜான்சன் இறந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement