dinamalar telegram
Advertisement

நீதித்துறை பணிகளை முறைப்படுத்த புதிய சட்ட மசோதா

Share
Tamil News
சென்னை:""நீதித்துறையில் பணிகளை நெறிமுறைப்படுத்தவும், பொறுப்புடைமையை கொண்டு வரவும் புதிய சட்ட மசோதா பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்,'' என மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு பி.எல்., படிப்பில் 629 பேர், பி.ஏ., பி.எல்., ஹானர்ஸ் படிப்பில் 119 பேர், எம்.எல்., படிப்பில் 41 பேர், டிப்ளமோ படிப்பில் எட்டு பேர் பட்டம் பெற்றனர். மேலும் ஏழு பேர் பிஎச்.டி., பட்டம் பெற்றனர்.
விழாவில், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:நீதித்துறையில் பணிகளை நெறிமுறைப்படுத்தவும், கடமைக்கு பதில் சொல்லும் பொறுப்புடைமையை கொண்டு வரவும் சட்ட மசோதா, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். தற்போது இந்த மசோதா அமைச்சரவையின் பரிசீலனையில் உள்ளது. இச்சட்டத்தின்படி, தவறு செய்பவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவதுடன், அவர்களுக்கு தண்டனை வழங்கவும் முடியும். இதற்காக கமிட்டியும் அமைக்கப்படும்.தேசிய உயர்கல்வி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் பார் கவுன்சிலை கொண்டு வருவது தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபலுடன் விவாதிக்கப்படும். தேசிய உயர்கல்வி கவுன்சிலின் கட்டுப்பாட்டில் பார் கவுன்சில் கொண்டு வரப்பட்டாலும், அதன் தனித் தன்மையை விட்டுத்தராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க சட்டத் திருத்தம் வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தற்போதைய நிலையிலேயே அமல்படுத்தப்படும். ஜாதிவாரியான மக்கள்தொகை தொடர்பாக புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை. பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள் ளது.இவ்வாறு வீரப்ப மொய்லி பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

Advertisement